வியாழன், 11 ஏப்ரல், 2013

நினைவாற்றலையும் கற்றுத் தரலாம்!





நினைவாற்றலையும் கற்றுத் தரலாம்!

இந்தியாவிலேயே முதல், "கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி சாம்பியன்' பட்டம் வென்ற, ஜான் லூயிஸ்: நான், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் போதே, ஆசிரியர்கள் சொல்வதை காதில் உள்வாங்கி, படிக்கக் கூடிய ஒவ்வொன்றையும் தொடர்புபடுத்தி, மனதில் காட்சிகளாக உருவகப்படுத்தி, மனப்படமாக படித்ததால், எதுவும் மறக்காமல், பாடங்களைஎளிதில் நினைவில் பதிய வைத்தேன்.டால்மியா அரசு உதவி பெறும் பள்ளியில், 14 ஆண்டுகளாக, வேதியியல் ஆசிரியராக பணியாற்றிய போது, பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் பாடத்தில், யாரும் தோல்வியடைந்தது இல்லை. இதற்கு, என்னைப் போலவே மாணவர்களையும் மனப்பாடம் செய்ய விடாமல், காட்சிகளாக உருவகப் படுத்தி, மனப்படமாக படிக்கும் முறையைச் சொல்லி தந்ததேகாரணம்.மனப்படமாக காட்சி படுத்தும் திறன் இருந்த தால், செஸ் போட்டியைப் போலவே, மூளைக்கு வேலை கொடுக்கும் போட்டிகளில் பங்கு பெறஆர்வம் ஏற்பட்டது. 2001ம் ஆண்டு,சென்னையில் நடந்த, ஆசிய அளவிலான, மெமரி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் பங்கு பெற்று, முதல் போட்டி யிலேயே, சாம்பியன் பட்டத்தை வென்றேன்.

இங்கிலாந்தில், 2002ல் நடந்த, உலகளவிலான மெமரி போட்டியில் பங்கேற்று, ஆறாம் இடம் பெற்றேன். 2003ல், மான்செஸ்டரில் நடந்த போட்டியில், "கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி சாம்பியன்' பட்டத்தை வென்றேன். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியன், நான் தான்.இப்போட்டியில், ஏறு வரிசை, இறங்கு வரிசை என, வரிசை எண்களாக இல்லாமல், "ரேண்டம்' முறையில், மனம் போன போக்கில் திரையில் அடுக்கப்பட்ட எண்களை பார்த்துவிட்டு, குறைந்தது, 713 அடுக்கப்பட்ட எண்களை, தவறாமல், அதேவரிசைப்படி ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டும் என, மூன்று விதமான போட்டிகள் நடைபெறும். இதில் ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட, போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். நினைவாற்றலையும், ஒரு படிப்பாக சொல்லித் தரலாம். தொடர்புக்கு: 97153 33175.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக