வியாழன், 11 ஏப்ரல், 2013

தினமணி இணையத் தாள்: புதிய வடிவில்!

என்ன வந்து என்ன? தினமணிச் செய்தியைப் பகிர்வதற்காக இணைப்பை  அளித்தால், அந்த இணைப்பில் இருந்து மூலச் செய்தியைப் படிக்க முடிவதில்லை. பகிரும் பொழுது படங்களின் மேலேயே எழுத்துகள் பதிகின்றன. மதியின் படம் போன்றவை எல்லாம்  அன்றாடம் இடம் பெறுவதில்லை. அதில் என்ன சிக்கல் என்று புரியவில்லை.
கருத்துகளைப்பதியும் பொழுது முந்தைய முறை மாறிய பின்பு மிகவும் தாழ்ச்சியாகத்தான்  பதிவு இடம்  பெறுகிறது. இது வாசகர்களுக்குச் சலிப்பைத் தருகிறது. சிறந்த கருத்துகளைத் தினமணி வெளியிட்ட பொழுது ஐந்திற்கு ஐந்தும் என் கருத்து இடம் பெற்றுள்ளது. இருப்பினும் நான், இனத்தைக்காப்போம் என்னும் முழக்கத்தை இறுதியில் இடுவதால் அதன்பின், பெரும்பாலான கருத்துகள் இடம் பெறுவதில்லை. தப்பித் தவறி ஒன்றிரண்டு எப்பொழுதாவது வருகிறது.
இன்று கருத்துகளைப் பதியும் பொழுது

மன்னிக்கவும்!

நீங்கள் தேடிய பக்கம் கண்டடையப்படவில்லை; பக்கம் இல்லை அல்லது மாற்றலுக்கு உள்ளாகியிருக்கும்.
தயவுசெய்து நீங்கள் உள்ளீடு செய்த வலைத்தள முகவரியை சரிபார்க்கவும்.
என வருகிறது.
இப்படிக் குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தினமணி ஆசிரியரும் வெளியீட்டாளரும் இதில் கருத்து செலுத்த வேண்டும்.  வாசகரைப் போன்று வேறு முறையில் இவ்விதழ்ச் செய்தியைப் படித்தும் பகிர்ந்தும் பார்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தினமணி இணையத் தாள்: முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவில்!










தினமணி இ-பேப்பர் இன்று முதல் முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவில் படிக்கக் கிடைக்கிறது.
வாசகர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, தினமணி- புது தில்லி, சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், திருச்சி, தருமபுரி ஆகிய தினமணியின் 8 பதிப்புகளும் இணையத்தில் இலவசமாகவே படிக்கக் கிடைக்கும்.
இதனுடன் இன்று முதல், முதல்முறையாக தினமணிக் கதிர், சிறுவர் மணி ஆகிய இணைப்பு புத்தகங்களும், வெள்ளி மணி, கொண்டாட்டம் ஆகிய பக்கங்களும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் அலமாரியில் அடுக்கி வைத்ததுபோன்ற தோற்றத்தில் இணையத்தில் அளிக்கப்படுகிறது.
தினமணி இ-பேப்பர் படிக்க...
இங்கே க்ளிக் செய்யவும்: லிங்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக