திங்கள், 8 ஏப்ரல், 2013

சமாளிக்கும் திறன்!

சமாளிக்கும் திறன்!

பெண்கள், பேப்பர் கப் தொழிலை திறம்பட நடத்த தேவையான வழிமுறைகளை தரும், ராமசாமி தேசாய்: நான், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிலையத்தின், திட்ட மேலாளராக பணியாற்றுகிறேன். இன்று, சுயதொழில் செய்ய விரும்பும் பல பெண்கள் தேர்ந்தெடுப்பது, "பேப்பர் கப்' தயாரிப்பு தான். ஆனால், தற்போதைய போட்டிச் சூழலில், பேப்பர் கப் தொழிலை பெண்கள் வெற்றிகரமாக நடத்த, அயராத உழைப்பும், சந்தை பற்றிய கூர்மையான அறிவும் கட்டாயம் தேவை.டீக்கடைகளில் பயன் படுத்தப்படும் பிளாஸ் டிக் கப்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற் படுத்துவதால் அரசும், தொண்டு நிறுவனங்களும், பிளாஸ்டிக் கப் பயன்பாட்டை நீக்கப் போராடியதால், 110 மைக்ரான், 150 மைக்ரான், 250 மைக்ரான் அளவுகளில், பேப்பர் கப்கள் சந்தைக்கு அறிமுகமானது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும், பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரங்கள் தற்போது, 6 லட்சம் ரூபாய்க்கே கிடைக்கின்றன.பத்து ஆண்டுகளுக்கு முன், பேப்பர் கப்பை அறிமுகப்படுத்திய போது, 110 மைக்ரான் கப்பின் விலை, 32 பைசா முதல் 35 பைசா வரை விற்கப்பட்டது.

மூலப்பொருளான காகிதத்தின் விலை கிலோவுக்கு, 56 ரூபாயாக இருந்தது. தற்போது, காகிதத்தின் விலை, 84 ரூபாயாக உயர்ந்து விட்டாலும், உற்பத்தி அதிகரித்ததால், 110 மைக்ரான் கப்பின் விலை, 29 பைசாவாக குறைந்து விட்டது.நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேப்பர் கப்கள் தயாரித்து, மாதத்திற்கு, 15 லட்சம் கப்கள் வரை, விற்பனை செய்யலாம். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், ஜெனரேட்டரில் ஓட்டலாம் என்றால், வருமானம் கட்டுப்படியாகாது. பேப்பர் கப்கள் லேசான எடை என்பதால், சேமித்து வைக்க கூடுதல் இடம் தேவை. அதிகமான ஆர்டர்களை பெற்று, மொத்தமாக பார்சலில் அனுப்புவதே சிறந்தது.உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கஷ்டத்தை சமாளித்து, முதல் தர பேப்பரில் தயாரான கப்பை, 32 பைசா விற்பனையில் விற்பதன் மூலம், நல்ல லாபம் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக