வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சறுக்கோட்ட விளையாட்டு

எம்.ஜி.ஆரால் ஸ்கேட்டிங் விளையாடும் குடும்பம்!



சறுக்கோட்டத்திலும் உள்ளரங்க வளை பந்திலும் (கேட்டிங்கிலும், இன்லைன் ஹாக்கிப் போட்டியிலும் அமை தியாகச்  சாதித்துக் கொண்டிருக்கிறார் சென்னையின் 15 வயது வீரரான பி.என். ரெளஷில். இவர் தமிழக இன்லைன் ஹாக்கி அணியின் இளம் கேப்டனும்கூட. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19-வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஸ்கேட்டிங் சக்கரங்களை கால்களில் கட்டிக்கொண்டு பனிப் பிரதேசங்களில் விளையாடப்படும் ஹாக்கிப் போட்டியை ஐஸ் ஹாக்கி என்றழைக்கிறார்கள். ஸ்கேட்டிங் மைதானத்தில் விளையாடப்படுவது இன்லைன் ஹாக்கிப் போட்டி. ஐரோப்பிய நாடுகளில் பனிப் பிரதேசங்கள் இருப்பதால் அங்கு ஐஸ் ஹாக்கி விளையாடப்படுகிறது. இந்தியாவில் இன்லைன் ஹாக்கி விளையாடப்படுகிறது. வட மாநிலங்களில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த இன்லைன் ஹாக்கி, கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்திலும் பிரபலமடைந்து வருகிறது. அதற்கு சான்றாக சண்டீகரில் நடைபெற்ற தேசிய இன்லைன் ஹாக்கிப் போட்டியில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது தமிழக அணி. பொதுவாக ஸ்கேட்டிங் ஷூவில் 4 சக்கரங்கள் இருக்கும். அவை காரின் அடியில் சக்கரங்கள் இருப்பதைப் போன்று நான்கு புறமும் இருக்கும். ஆனால் இன்லைன் ஹாக்கிப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்கேட்டிங் ஷூவில் 4 சக்கரங்கள் இருந்தாலும், 4 புறமும் இல்லாமல் ஒரே வரிசையில், அதாவது சைக்கிளில் சக்கரங்கள் இருப்பது போன்று ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியின்போது ஷூ லேசாக தடம்புரண்டுவிட்டாலும், கால் உடையும் அபாயம் அதிகம். ஆபத்து என்றாலும் அதிலும் அசாத்திய துணிவோடு அற்புதமாக விளையாடுகிறார் ரெüஷில். சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு இன்லைன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்த ரௌஷிலை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களை சறுக்கிக் கொண்டு கடும் வேகத்தில் சென்றாலும், நம்முடைய கேள்விகளுக்கு மிகவும் சாந்தமாகவே பதிலளித்தார் ரெüஷில்.ஸ்கேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது எப்படி?என் அப்பா பி.என்.வி.ராவ் முன்னாள் ஸ்கேட்டிங் வீரர். அவரைப் பார்த்தே நானும் ஸ்கேட்டிங்கில் களமிறங்கினேன். ஆனால் அவர் ஸ்கேட்டிங் விளையாட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தான் காரணம். "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் எம்.ஜி.ஆர். ஸ்கேட்டிங் செல்வதை எனது தந்தை பார்த்துள்ளார். அந்த நிமிடம் முதல் ஸ்கேட்டிங் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அப்போது ஸ்கேட்டிங் ஷூவை நினைத்ததும் அவரால் வாங்க முடியவில்லை. அது எங்கு கிடைக்கும் என்றே தெரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து ஒரு வழியாக ஸ்கேட்டிங் ஷூவை வாங்கியிருக்கிறார். 1980-களில் பல்வேறு போட்டிகளிலும், பனிச்சறுக்குப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். நான் ஸ்கேட்டிங் மற்றும் இன்லைன் ஹாக்கியில் விளையாட எனது தந்தை காரணம் என்றால், அவர் விளையாட எம்.ஜி.ஆர்.தான் காரணம். உங்களின் ஸ்கேட்டிங் பயணம் பற்றி...10 வயது முதல் ஸ்கேட்டிங் விளையாடினாலும், 2011-ல் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான இன்லைன் ஹாக்கிப் போட்டியில் எனது தலைமையிலான சென்னை மாவட்ட அணி தங்கம் வென்றது. அந்த வெற்றியால்தான் 14 வயதிலேயே தமிழக சீனியர் இன்லைன் ஹாக்கி அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சண்டீகரில் நடைபெற்ற தேசிய அளவிலான இன்லைன் ஹாக்கிப் போட்டியில் தமிழக அணி 7-வது இடத்தைப் பிடித்தாலும், பலம் வாய்ந்த பஞ்சாப் வீரர்களுக்கு கடும் சவால் கொடுத்தோம். வழக்கமாக எல்லா அணிகளுக்கு எதிராகவும் 20, 30 கோல்களை அடிக்கும் பஞ்சாபிகள், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்கள் மட்டுமே அடித்தனர். போட்டி முடிந்த பிறகு எங்களைச் சந்தித்த பஞ்சாபிகள் எங்களை பாராட்டிவிட்டு சென்றதை மறக்க முடியாதது. சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அனுபவம் எப்படியிருந்தது?சீனாவின் லீ ஷூய் நகரில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இந்தியாவில் ஸ்கேட்டிங்குக்கு என பெரிய அளவில் மைதானங்கள் இல்லாததால், அந்த மைதானத்தைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. வெளிநாட்டு வீரர்கள் தரமிக்க ஸ்கேட்டிங் ஷூக்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் ஸ்டெப்ஸ் உள்ளிட்டவற்றை பார்த்தது நல்ல அனுபவமாக அமைந்தது. இன்லைன் ஹாக்கி ஷூ, ஹாக்கி ஸ்டிக் போன்றவை எங்கு கிடைக்கிறது?ஸ்கேட்டிங் ஷூ, ஹாக்கி ஸ்டிக் ஆகியவற்றை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். நான் பயன்படுத்தும் ஷூவின் விலை ரூ.52 ஆயிரம். ஹாக்கி ஸ்டிக்கின் விலை ரூ.10 ஆயிரம். இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் (பந்தை பக் என்கிறார்கள்) விலை ரூ.800. இந்தப் பந்து சாதாரண பந்துகளைப் போன்று உருளை வடிவில் இல்லாமல், வட்டவடிவில் தட்டையாக உள்ளது. ஸ்கேட்டிங்கில் உங்களின் இலக்கு...இப்போது ஜூனியர் ப்ரீஸ்டைல் மற்றும் ரேஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். விரைவில் சீனியர் பிரிவில் பங்கேற்க வேண்டும். உலக சாம்பியன்ஷிப்பை வெல்வதுதான் இப்போதைய இலக்கு. ஸ்கேட்டிங்கை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் ஸ்கேட்டிங் இடம்பெறும்பட்சத்தில் அதில் பங்கேற்க வேண்டும். தினந்தோறும் பயிற்சி மேற்கொள்கிறீர்களா?எனது தந்தைதான் எனது பயிற்சியாளர். தமிழக இன்லைன் ஹாக்கி அணிக்கும் அவர்தான் பயிற்சியளிக்கிறார். காலையில் வீட்டில் சில பயிற்சிகளை செய்கிறேன். இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஷெனாய் நகர் ஸ்கேட்டிங் மைதானத்தில் பயிற்சி பெறுகிறேன். இங்கு எல்லோரும் பயிற்சியை முடித்தபிறகே இன்லைன் ஹாக்கி விளையாட முடிகிறது. இரவு 8.30 மணிக்குப் பிறகு மைதானத்தில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுவதால் சிரமமாக உள்ளது. இன்லைன் ஹாக்கிப் போட்டிக்கு தனி மைதானம் அமைக்கப்பட்டால் உதவியாக இருக்கும். வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டா, உங்களின் பொழுதுபோக்கு என்ன?பள்ளியில் கூடைப்பந்து, பீல்டு ஹாக்கிப் போட்டிகளில் விளையாடுவேன். இணையதளத்தில் ஐஸ் ஹாக்கிப் போட்டி பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவையே எனது பொழுதுபோக்கு.
கருத்துகள்

ஆல் தி best
By ச.naveen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக