ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

13இல் பருவம் எய்தும் ஆண்கள்,"எதையும் திணிக்காதீர்கள்!

சொல்கிறார்கள்

"13 இல்  அகவைக்கு  வரும் ஆண்கள்!'
மூலிகை மருத்துவர் வி.ஜமுனா: பெண்கள், பன்னிரண்டு, பதிமூன்று வயதில் வயசுக்கு வருவது மாதிரி, ஆண்களும், சிறுவர்களாக இருக்கும் போது, கிட்டத்தட்ட அதே வயதுகளில், வயசுக்கு வருகின்றனர்.ஆனால், பெண்களுக்கு, வெளிப்படையாக, "பீரியட்ஸ்' ஏற்படுவது போல, ஆண்களுக்கு ஏற்படுவதில்லை என்பதால், அவர்கள், வயசுக்கு வருவது, அவர்களது குடும்பத்தினருக்கே தெரிவதில்லை.பெண்கள் எனில், 12 முதல், 15 வயதுக்குள் பருவம் எய்துகின்றனர். இப்போது எல்லாம், 10 வயதில் கூட இது நிகழ்கிறது. ஆண்கள் எனில், 13 முதல், 18 வயதுக்குள், பருவம் எய்துகின்றனர்.ஆண்களுக்கு மீசை, தாடி மற்றும் மறைவிடங்களில் மென் முடி முளைப்பது, குழந்தை போன்ற குரல் உடைந்து கரகரப்பாக மாறுவது, தசைகள் இறுகுவது, பிறப்புறுப்பு வளர்ச்சி பெறுவது என்று, பல மாறுதல்கள் நிகழ்கின்றன.அந்த சமயம் தான், அந்தச் சிறுவனின் உடம்பில், அதுவரை தூங்கிக் கொண்டிருந்த விதைகள், பிட்யூட்டரி சுரப்பியால் தூண்டப்பட்டு, உயிரணுக்களைத் தயாரிக்கும் பருவத்தை அடைகின்றன. விந்து உற்பத்தியும், அந்த வயதில் தான் ஆரம்பிக்கிறது. பிரச்னையில்லாத சிறுவனுக்கு, இப்படி, இந்த வயதில், விந்து மற்றும் உயிரணு உற்பத்தி தடையின்றி நிகழ்கிறது.குழந்தை பருவத்தில், அவனுக்கு, வாரத்தில் ஒரு நாள், கருணைக் கிழங்கு, இரண்டு நாள், முருங்கைக் கீரை, தினமும் நெய் சாப்பிடக் கொடுக்க வேண்டும். அசைவத்தில், ஆட்டு இறைச்சி கொடுக்கலாம்; மாட்டிறைச்சி வேண்டாம்; அது மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்.புரோட்டீன், விட்டமின், தாதுப் பொருட்கள் என, அனைத்து சத்துகளும் கலந்த சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போனாலோ அல்லது ரசாயனக் கலவை அதிகம் சேர்ந்த செயற்கையான ரெடிமேட் உணவுகள் சேர்த்துக் கொள்ளும் போதோ, அந்தச் சிறுவனுக்கு, இயல்பாக உண்டாக வேண்டிய விந்தணுக்கள் வராமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.அதுபோலவே, அந்தச் சிறுவனுக்கு, உடல் நிலை சரியில்லாமல் போனால் எடுத்துக் கொள்ளும் தொடர் மருந்துகளிலும் அதிக கவனம் வைக்க வேண்டும். இவை அனைத்தும், அந்தச் சிறுவனின் உயிரணு உற்பத்தியை பாதிக்கிறது.

"எதையும் போட்டு த் திணிக்காதீங்க!'
குழந்தை நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன்: பொதுவா, இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், "துறுதுறு'ன்னு இருப்பாங்க. எதையாவது எடுத்து வாயில போட்டுக்குவாங்க. அதனால, இந்த வயசு குழந்தைகள, ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கணும். "சைக்காலாஜிக்'கலாகவும், ரொம்ப கேர்புல்லா பார்த்துக்க வேண்டிய வயசு. பெரியவங்க என்ன பண்றாங்களோ, அதைப் பார்த்து தான், குழந்தைங்க கத்துக்கும். எந்த மாதிரியான வார்த்தைகள், சுற்றி இருக்கிறவங்க பேசுறாங்களோ, அதைத் தான், குழந்தைகளும் பேசும். அதனால, குழந்தைங்க எதிரில் சண்டை போடறது, கெட்ட வார்த்தைகள் பேசறது போன்றவற்றை தவிர்க்கணும். நல்ல விஷயங்கள் கத்துக் கொடுக்கணும். நல்ல விஷயங்களை அவங்களுக்கு எடுத்து சொல்லணும்.ஸ்கூல் போக ஆரம்பிச்சதுக்கப்புறம், கொஞ்சம் கொஞ்சமா அடம் பிடிக்கிறது குறைய ஆரம்பிக்கும். ஊசி போட்டா வலிக்கும்னு சொல்லி அழுதாலும், ஒழுங்கா காட்டுவாங்க. சொன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கிற வயசு.குழந்தைகள் புரிஞ்சுக்க ஆரம்பிக்கற வயசுல, பெரியவங்க சில விஷயங்களைப் புரிஞ்சுக்கறது இல்லை. ஸ்கூல் சேர்த்த உடனே, எல்லா பெற்றோருமே, தங்கள் குழந்தைங்க முதல் மார்க் வாங்கிடணும்னு ஆசைப்பட்டு, அவங்களை, "போர்ஸ்' பண்றாங்க; அது ரொம்ப தப்பு. குழந்தைகள் வயதிற்கு மீறி கல்வி திணிக்கப்படும் போது, நிறைய குழந்தைக தன்னால முடியாதுன்னு சொல்லி அந்த போட்டியிலிருந்து விலகிக்குவாங்க; சிலர் உடனே புரிஞ்சுக்குவாங்க; சிலர் கொஞ்சம் லேட்டா புரிஞ்சுக்குவாங்க.அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, பெற்றோர் ஒரு பக்கம், ஆசிரியர் ஒரு பக்கம்னு குழந்தைகளுக்கு, "பிரஷர்' கொடுக்கும் போது, தன்னால முடியலையோன்னு நினைக்க ஆரம்பிப்பாங்க. அப்ப, அந்த வயசுல எவ்வளவு கத்துக் கொடுக்கணுமோ, அவ்வளவு தான் கத்துக் கொடுக்கணும். எதையும் போட்டு திணிக்காம, அவங்கவங்க திறமையை கண்டுபிடிச்சி வளர்க்கப் பாருங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக