ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

1000 புதுப்படி குடிநீர் விலை உரூ. 40: குடிநீர் வாரியம் அறிவிப்பு

1000  புதுப்படி  குடிநீர் விலை  உரூ. 40: குடிநீர் வாரியம் அறிவிப்பு



 
சென்னை, செப். 22: குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும் என சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள், தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவ்வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அபூர்வவர்மா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைக் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்  6 ஆயிரம் லிட்டர் ரூ.400-க்கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வியாபாரப் பயன்பாட்டுக்கான குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.510-க்கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.765- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது, நீரேற்று நிலையங்களிலிருந்து தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் குடிநீர்  கொண்டு செல்லும் நுகர்வோர்களுக்கு வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.40-க்கும், ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்ட வியாபார பயன்பாட்டுக்கான குடிநீர் 1000 லிட்டர் ரூ.60- க்கும் விற்கப்பட உள்ளது.இதற்கான முன்பதிவுக்கு,கொளத்தூர் பகுதி நீரேற்று நிலையம்: 044 - 26505435, 8144930313, 8144930906 கீழ்ப்பாக்கம் பகுதி நீரேற்று நிலையம்: 044 - 26441679, 8144930362, 8144930908 தெற்கு பகுதி நீரேற்று நிலையம் (வள்ளுவர் கோட்டம்): 044 - 28341448, 8144930356, 8144930909 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் தகவல்களுக்கு, 044 - 45674567 என்ற நுகர்வோர்கள் வாரியத் தலைமை அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக