வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பழமையும் புதுமையும் இணைப்பே எங்கள் வெற்றி

சொல்கிறார்கள்
தரவு : தினமலர் 

"மிக்ஸ் அண்டு மேட்ச்' தான் எங்கள் வெற்றி! கைத்தறி ஆடைகள் மட்டுமே தயார் செய்து, இன்றைய பேஷன் உலகுக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கும் ஜெயஸ்ரீ: "ஊருக்கெல்லாம், வாண்டு மாமான்னு அறிமுகமான எங்க தாத்தா கிருஷ்ணமூர்த்தி, பக்கா காந்தியவாதி. "நம் பாரம்பரியம் அழிந்து விடக் கூடாது. அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு' ன்னு அடிக்கடி சொல்லும் தாத்தா, நாங்க சின்னக் குழந்தைகளா இருந்த போதே, எங்களுக்கு பாரம்பரியத்தையும், தேசிய உணர்வையும் ஊட்டினார். அந்த தாக்கத்தின் ஆழம் தான், சேலத்துல நாங்க நடத்துற, "சில்க் த்ரெட்ஸ் ÷ஷாரூம்' உருவாகறதுக்கு அடிப்படை! இந்த தலைமுறைப் பெண்கள், கைத்தறி ஆடைகளை அணியறதில்லைங்கிற வருத்தம், எங்களுக்கு உண்டு. இதனால, தறித் தொழில் செய்ற குடும்பங்கள் பல, முடங்குற ஆதங்கம் நிறைய உண்டு. இந்த நிலையை மாத்தி, கதர் ஆடைகளை மக்கள் விரும்பச் செய்ய, சில புதுமையான முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தோம். "கைத்தறியா... அது பாட்டி புடவை'ன்னு ஒதுக்கும் பெண்களுக்கு, அந்த புடவையில், நவீன, "ஹேண்ட் ஒர்க்' செய்து, "டிரெண்டியா' மாத்திக் கொடுத்தப்ப, "வா...வ்'ன்னு வரவேற்பு தந்தாங்க. "சில்க் த்ரட்ஸ் ÷ஷாரூம்' மூலமா, இப்போ உள்ளூரில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கறதோட, நம் பாரம்பரியக் கலையையும், தொழிலையும் புதுப்பிக்கிற சந்தோஷமும் கிடைச்சுருக்கு. நெசவாளர்களை வைத்து புடவைகள் நெய்யச் செய்து, இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களிடம், அந்தப் புடவைகளைக் கொடுத்து, காய்கறிகள், பூக்களில் இருந்து கிடைக்குற இயற்கை வண்ணத்தை பயன்படுத்தி, சேலையை பாலில் நனைத்து, கையாலேயே வரையப்பட்ட டிசைன்கள் கொண்ட, "ஆர்ட் சாரீஸ்' தயாரிக்கிறோம். மகாராஷ்டிரா புடவையில், ஆந்திரா ஆர்ட் கலம்காரி டிசைன், காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் குஜராத் ராஜ்கோல் பட்டோலா மாடல், ஒடிசா காட்டன் புடவையில், சத்தீஸ்கர் பட்டு டிசைன் என, "மிக்ஸ் அண்ட் மேட்ச்' செய்து, புது வகையான மாடல்களை உருவாக்கித் தர்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக