வெள்ளி, 25 மே, 2012

சிறிலங்காவில் தலையிடத் தவறிவிட்டது ஐ.நா பாதுகாப்புச்சபை – அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

சிறிலங்காவில் தலையிடத் தவறிவிட்டது ஐ.நா பாதுகாப்புச்சபை – அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

amnesty
சிறிலங்கா விவகாரத்தில் தலையிடத் தவறியுள்ளதாக ஐ.நா பாதுகாப்புச்சபை மீது அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான உலக மனிதஉரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரியாவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் விடயத்திலும் பாதுகாப்புச்சபை செயலற்ற நிலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக அமைதிக்காக ஐ.நா பாதுகாப்புச் சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள சில நாடுகள் சிரியா, சிறிலங்கா போன்றவற்றை பாதுகாப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புசபையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக