புதன், 23 மே, 2012

மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டண விவரம்

மொழிப்பாடம், ஆங்கிலம்  எனத் தனித்தனியாகக் குறிப்பிடுகிறாரக்ளே! ஆஙகிலம் மொழி அல்ல என்கிறதா கல்வித்துறை? ஏன் இந்தத் தடுமாற்றம்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டண விவரம்

First Published : 22 May 2012 04:55:13 PM IST


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பலாம். அவர்களுக்கு எதற்கு எவ்வளவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.விடைத்தாள் நகல் பெறமொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒவ்வொரு தாளுக்கும் 550 ரூபாய்இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 275 ரூபாய்.மறுகூட்டல்மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 305 ரூபாய்இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாய்.மறு மதிப்பீடுவிடைத்தாள் நகல் பெற்ற பிறகு 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 1,010 ரூபாய்இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 505 ரூபாய்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான  கட்டணத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், Director of Government examinations, chennai 6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையை (டிடி) ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக