நாடு தொழ வாழ்ந்த நமணன் (09.10.1975 – 18.05.2012)
ஊரெழுவைப்
பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட தேசப்பற்று
உணர்வாளர் நமணன் குகநாதன் அவர்கள் 18.05.2012 வெள்ளிக்கிழமை அன்று
காலமானார்.
தேசப்பற்று உணர்வாளர் நமணன் கடலில் பலி
யாழ்ப்பாணம், ஊரெழுவில் ஒக்டோபர் 9, 1975
இல் பிறந்த இவர், நான்கு ஆண் சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் மூன்றாவது
மகன். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊரெழு கணேசா வித்தியாலயத்திலும், பின்னர்
யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார்.
ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகத்தில்
கணினிப் பொறியியலில் (B.Eng.) பட்டம் பெற்ற இவர், பின்னர் வெஸ்ரன்
பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பட்டமும் (B.Ed.) பெற்று, ரொறன்ரோவில் கணினிப்
பொறியியலாளராகப் பணியாற்றி வந்தார். 2004இல் மணவாழ்க்கையைத் தொடங்கிய
பின்னரும் தனது பொதுவாழ்வுப் பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து
வந்தார்.
கால்ரனில் கல்வி பயின்ற காலத்தில்,
கால்ரன் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பின் தலைவராகச் செயற்பட்டு
மாணவர்களின் கல்வி கலாசார மேம்பாட்டுக்காக உழைத்ததுடன், இக்காலகட்டத்தில்
மாணவர்கள் மத்தியில் தமிழ்த் தேசியத்தின் தேவை குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தியும் அவை தொடர்பான தமிழ்த் தேசிய நிகழ்வுகள் அனைத்தையும்
ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியவர்.
ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்
செயற்பாட்டாளராக இருந்து, அங்கு வாழும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக
அரும்பாடுபட்டவர். ஒட்டாவிலுள்ள தமிழ்க் குடும்பங்கள் அனைத்தையும்
ஒருங்கிணைத்து தமிழ்த்தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அத்துடன் தமிழர்
கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் முன்னின்று சிறப்புடன்
அரங்கேற்றியவர்.
தாயக உறவுகளின் துயர் துடைப்புக்காக இரவு
பகல் பாராது அயராது உழைத்து வந்தார். தேசிய எழுச்சி, இன ஒற்றுமை, எதிர்கால
தமிழர் சமுதாயத்தின் முன்னேற்றம் தொடர்பான தெளிவான நோக்குடன் தளராது
செயற்பட்டு வந்தார். தமிழ் மக்கள் மீதான பாசம், பரிவு, கருணையுடன் அளவற்ற
அக்கறையும் கொண்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தவர். தாயக
விடுதலையின் மீது தணியாத தாகம் கொண்டு அதற்காக தன்னையே அர்ப்பணித்து உறுதி
தளராத, வேகமான நம்பிக்கையூட்டும் செயல்வீரன். கடும் சவால்கள் நிறைந்த
காலத்திலும் தெளிவான, உறுதியான, தளராத செயற்பாடும், தாயக மக்களுக்கான உதவி,
வாழ்வாதாரம் மற்றும் கல்வியாதாரத்துக்கான தொடர் பங்களிப்பை செய்து
வந்தவர்.
எமக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமே என்றும் எமது தேசியத் தலைவரின் பின்னால் அணிவகுத்து நின்றவர்.
கனடாவில் நடைபெற்ற அனைத்து தமிழீழம்
நோக்கிய செயற்பாடுகளிலும் தனது முழுமையான பங்களிப்பை செலுத்திய
தேசப்பற்றாளன். இரவு பகல் பாராது தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிய
செயற்பாட்டாளன்.
2004 ஏப்ரல் மாதத்தில் தமிழீழம் சென்று
திரும்பிய இவர் புதிய வீச்சோடு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
எமது மக்களின் விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரர்களின் கனவை
நனவாக்கவேண்டுமென்று இன்றைய சவால்களுக்கு மத்தியிலும் தெளிவோடும்
உறுதியோடும் தேசியம் நோக்கிய பயணத்தில் பயணித்தவர்.
தனது அலுவலக பணிநிமித்தம் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் எதிர்பாராது விபத்தில் மே 18, 2012 அன்று சாவடைந்தார்.
கனடியத்தமிழர் சமூகம்.
திரு நமணன் குகநாதன் அன்னை மடியில் : 9 ஒக்ரோபர் 1975 — இறைவன் அடியில் : 18 மே 2012
*************
அன்னார், குகநாதன் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், அருட்செல்வம், காலஞ்சென்ற சந்திரிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், குமணன், தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜனந்தன் அருட்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சேயோன், தீபிகா, துர்க்கா, இமையாழ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
*************
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 24/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 12:30 பி.ப
முகவரி: Pine Hills Cementery, 625 Birchmound Rd
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி: +14164310105
அண்ணனுக்காய் கண்ணீரோடு ஒரு கவி*************
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 24/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: 3280 Sheppard Ave E, Highland Funeral Home
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 12:30 பி.ப
முகவரி: Pine Hills Cementery, 625 Birchmound Rd
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி: +14164310105
ஊரெழுவில் உதித்திட்ட உத்தமனே அண்ணா
உன் தங்கை உனக்காய் எழுதுகிறாள்
விழி நிறை கண்ணீரில் காகிதம் நனைந்திட
விண்ணகம் சென்ற மண்ணகத்து மன்னவனே
தியாக பூமியில் பூத்திட்ட புது மலரே – நீங்கள்
தியாக தீபத்தின் தம்பியா? என் அண்ணாவே
ஆழ்கடலில் எனை அலை அடித்து சென்ற போது
அன்னையாய் வந்த கட்டுமரம் நீங்கள் அண்ணா
அன்னை தேசம் விட்டு நீங்கள்
அன்னிய தேசம் சென்றாலும் அன்னை மண்ணிலே
அகதியான மாணவ வித்துக்களுக்காய்
அண்ணா உங்கள் வியர்வை எனும் நீர் இறைத்தீர்களே
உறவுகள் ஆயிரம் இருந்த போதும்
உற்ற காலத்தில் – என்னை
தங்கை எனும் நாமம் சூட்டி
தத்தடுத்த என் அண்ணாவே
பட்டமளிப்பு விழாவிற்கு உங்கள்
பாதம் படும் என சொல்லிவிட்டு – பாவி இவள்
பட்டங்கள் பெற முன்பே
பாரை விட்டு போனதேனோ
அன்னிய தேசம் சென்று எம் தேசம் மறந்து
ஆடம்பர வாழ்வு வாழும் எம் தேச உறவுகளே
ஒரு முறை நீங்களும் நமணனாய் மாறிப்பாரும்
மனிதத்தின் அர்த்தம் புரியும்.
கர்னனின் உடன் பிறப்பா அண்ணா நீங்கள் – இல்லை
கலியுகம் கண்டெடுத்த அவன் மறுபிறப்பா?
கண்கள் குளமாக கனத்த இதயத்துடன்
கல்லறை பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்
தகவல்
உடன்பிறவா சகோதரி, பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
Tamil Canadian dies at Virginia beach
Namanan Guhananthan (1994, 13A Maths Jaffna Hindu College) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.
Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead.
Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his studies, and since then lived in Canada. He was an Engineering graduate from the Carleton University Canda. He was working for Dominion Voting Systems, and went to U.S. on an official trip where he met his untimely death.
Namanan has been a Tamil activist since his school days and dedicated a lot of time for Tamil events.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக