<எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலையும் புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததன் ரகசியம் > பொதுவாகச்சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் கேட்க இருக்கும் வினாக்களை முன்னதாகவே எழுத்து மூலமாகச் சட்டமன்றச் செயலகத்தில் தெரிவித்து விடுவர். அவ்வினாவிற்குரிய விடை குறிப்பிட்ட துறையில் கேட்டுப் பெறப்படும். சட்டமன்றத்தில் அவ்வினாக்கள் கேட்கப்படும்பொழுது உரிய அமைச்சர்கள் துறையில் இருந்து வந்த விடையைத் தெரிவிப்பர். இதுவே நடைமுறை. எனவே, ஒரு மறைபொருளும் இல்லை. நடைமுறை அறியாதவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+
மானியக் கோரிக்கைகளில் பதிலளித்த அமைச்சர்கள், எந்தக் கேள்வி கேட்டாலும்
பதிலையும் புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததன் ரகசியம் என்ன என்று
விசாரித்தபோது கிடைத்த பதில் சிரிப்பை வரவழைத்தது. பேரவைச் செயலகத்திடம் இருந்து,
எந்தெந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள் என்கிற விவரத்தை
முன்கூட்டியே பெற்று விடுகிறார்களாம் அமைச்சர்களின் உதவியாளர்கள். சம்பந்தப்பட்ட
உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் எழுப்ப இருக்கும் முக்கியமான கேள்விகளைக்
கேட்டுப் பெற்று விடுகிறார்களாம். அதிகாரிகளிடம் அதைக் கொடுத்து விளக்கத்தையோ,
பதிலையோ தயாராக வைத்துக் கொண்டு மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு வருகிறார்களாம்
அமைச்சர்கள். முதல்வரிடம் நல்ல பெயரை வாங்கிக் கொள்வதற்காக இவர்கள் கையாளும் உத்தி
இதுதான் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சொல்லிச் சிரிக்கிறார்களே,
மெய்யாலுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக