சரியான கருத்து. ஆனால், கூட்டுக் கொலையாளியான காங். மாற முடியாது. எனவே, காங்.ஆட்சியை விரைவில் மாற்ற பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். முதலில் காங்.ஆளும் மாநிலங்களிலும் பிறகு பிற மாநிலங்களிலும் கொலைகாரக் காங்.ஐ ஏன் விரட்டி அடிக்க வேண்டும் என முனைப்பான பரப்புரை மேற்கொண்டு தமிழர் நலனில் கருத்து செலுத்தும் புதிய அரசை அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற
மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்
First Published : 10 Jun 2011 02:35:31 AM IST
சென்னை, ஜூன் 9: இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான். ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும். அது ஏற்கபடாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக விலக வேண்டும். தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கை விரைந்து நடத்தவும், அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநாடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அகில இந்திய மாநாடு மார்ச் மாதம் பாட்னாவிலும் நடைபெற உள்ளது என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக