புதன், 22 ஜூன், 2011

Ban-ki-moon re elected: ஐநா பொதுச்செயலராகப் பான் கி-மூன் ஒருமனதாகத் தேர்வு

பாராமுகம், அலட்சியம்,ஒரு தலைச்சார்பாக அடக்குமுறைப் பக்கம் சாய்தல், வல்லாண் அரசுகளுக்கு அடி பணிதல் முதலான பண்புகளால் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தமைக்கு உடந்தையாக இருந்தைமைக்குப் பரிசாகப் பதவி நீட்டிப்பு. இனியும் தொடரட்டும் இனப்படுகொலைகள்!வலிமை குறைந்த நாடுகளும்  ஒடுக்கப்படும் மக்களும் மேலும் நலியட்டும்! என் செய்வது? பன்னாட்டு அவை என்பது அதிகாரமிக்க நாடுகளின் அவையாக மாறிவிட்ட பின்பு நாம் என்ன செய்யமுடியும்? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஐநா பொதுச்செயலராக பான் கி-மூன் ஒருமனதாக தேர்வு

First Published : 22 Jun 2011 10:11:36 AM IST

Last Updated : 22 Jun 2011 10:18:28 AM IST

ஐநா சபை, ஜூன்.22: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி-மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் பான் கி-மூன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி-மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பான் கி-மூன் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். பாதுகாப்பு சபையும் அவருக்கு ஆதரவு அளித்தது.தன்னை மீண்டும் பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுத்து மிகப் பெரிய கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாக பான் கி-மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக