ஞாயிறு, 19 ஜூன், 2011

10,0000 people : coocking struggle on the road for telungana: தனித் தெலுங்கானா கோரி 10 இலட்சம் பேர் சாலையில் சமைத்துப்போராட்டம்; நடிகை விசயசாந்தியும் பங்கேற்பு


தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்கள் தம் தொண்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தும் ஈழத்தமிழர் நலனுக்காகப் பொது மக்களைத் திரட்டியதில்லையே! வெட்கக்கேடானது! வேதனையானது! இனியேனும் திருந்தட்டும் தலைவர்கள்! தொண்டர்களும் கொத்தடிமைகளாக இராமல் தன்மான உணர்வுடன் திகழட்டும்!
இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
நகரி, ஜூன் 19-
 
தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஐதராபாத்தில் இன்று சந்திர சேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி சார்பில் ரோட்டில் சமைத்து உண்ணும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
 
ஐதராபாத் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் 10 லட்சம் அடுப்புகளை வரிசையாக வைத்து பொது மக்கள் சமையல் செய்தனர்.   இந்த போராட்டத்தில் பொது மக்கள், பெண்கள், வக்கீல்கள் சங்கத்தினர், ஐ.டி.நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகை யாளர் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
 
சாலை முழுவதும் விறகு அடுப்பு, மண்எண்ணை ஸ்டவ் அடுப்பு, கியாஸ் ஸ்டவ் அடுப்புகளை வைத்து சமையல் செய்தனர். காலையில் தெலுங்கானா பகுதி மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் டிபன் வகையான பாந்த்ரா எனப்படும் உணவை செய்து அனைவரும் சாப்பிட்டனர்.
 
மதியம் அனைவரும் கோழி கறி உணவு சமைத்தனர். மதியம் கோழி கறி உணவு சாப்பிட்ட பிறகு 2 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.   ஐதராபாத்தில் ஹைடெக் வளாகம் என்ற பகுதியில் நடிகை விஜயசாந்தி ரோட்டில் அடுப்பை வைத்து சமையல் செய்தார். தெலுங்கானா மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவே இந்த போராட்டம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக