தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக அடுத்துச் சொல்லப்படம் நாள் எந்நாளோ? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்:
இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்
First Published : 22 Jun 2011 12:36:39 PM IST
Last Updated : 22 Jun 2011 12:43:23 PM IST

கொழும்பு, ஜூன்.22: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சி எம்பியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இறுதிப் போரில் நந்திக் கடலில் நிகழ்ந்த மோதலின்போது பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பம் பாதுகாக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்பன போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் தேதி இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் வெளியிடவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்லஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பின்னர் கடைசி மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் செய்தி வெளியானது. அவரது உடலின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டதாக அஸ்வர் எம்பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்


By Pallavaram.T.Sampath
6/22/2011 3:46:00 PM
6/22/2011 3:46:00 PM


By mirudan
6/22/2011 3:33:00 PM
6/22/2011 3:33:00 PM


By சிலம்பு
6/22/2011 3:13:00 PM
6/22/2011 3:13:00 PM


By saravanakumar
6/22/2011 2:37:00 PM
6/22/2011 2:37:00 PM


By அவசரக் குடுக்கை
6/22/2011 2:17:00 PM
6/22/2011 2:17:00 PM


By udhayakumar
6/22/2011 2:04:00 PM
6/22/2011 2:04:00 PM


By Abdul Rahman - Dubai
6/22/2011 2:04:00 PM
6/22/2011 2:04:00 PM


By அன்புக்குமரன் . இந்தோனேசியா
6/22/2011 1:51:00 PM
6/22/2011 1:51:00 PM


By KOOPU
6/22/2011 1:48:00 PM
6/22/2011 1:48:00 PM


By Pallavaram.T.Sampath
6/22/2011 1:40:00 PM
6/22/2011 1:40:00 PM


By balakrishnan
6/22/2011 1:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/22/2011 1:19:00 PM