௧. மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இனிமேல், தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ௨.தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள சிங்களர்களுக்குத் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்காது என்றும் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இட முடியும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை கடற்படையினரால் 23 தமிழக மீனவர்கள் கைது; 5 படகு பறிமுதல்
First Published : 21 Jun 2011 11:00:35 AM IST
Last Updated : 21 Jun 2011 12:09:34 PM IST

ராமேஸ்வரம், ஜூன்.21: மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் கூறுகையில், கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், நள்ளிரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஒரு படகில் தப்பி வந்த மீனவர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்தார்.
கருத்துகள்


By KOOPU
6/21/2011 3:01:00 PM
6/21/2011 3:01:00 PM


By Paris EJILAN
6/21/2011 2:00:00 PM
6/21/2011 2:00:00 PM


By natarajan , chidambaram
6/21/2011 11:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/21/2011 11:38:00 AM