புதன், 22 ஜூன், 2011

voting machine with receipt - introduced : வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீட்டு பெறும் முறை அறிமுகம்


இரண்டாம் முறை வாக்காளர்கள் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுவதற்குத் துணை நிற்கும்.  பதிவுச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும் என்று  இருந்தாலும் அதைக் கொண்டு வந்து காட்ட வேண்டும் அல்லது வேறு வகையில் பார்க்குமாறு காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தப்படலாம். எனவே,முதல் முறையே சரியானது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீட்டு பெறும் முறை அறிமுகம்

First Published : 22 Jun 2011 05:48:17 AM IST


மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் ரசீதை அளிக்கும் கருவியின் செயல்பாட்டை தில்லியில் செவ்வாய்க்கி
புது தில்லி, ஜூன் 21: வாக்குப் பதிவு மின்னணு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் சீட்டு பெறும் புதிய இயந்திரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.  இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி சோதனை முறையில் 5 இடங்களில் மாதிரி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.  மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க., பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.  இந் நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இரண்டு வகைகளை தேர்தல் ஆணையம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.  இது குறித்து கூடுதல் தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியது:  சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற இயக்குநர் பி.வி. இந்திரேசன் தலைமையிலான நிபுணர் குழு அளித்த யோசனைகளின்படி இரண்டு வகையான இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் இயந்திரத்தில் பிரிண்டர் சீல் வைக்கப்பட்ட கண்ணாடி மேஜைக்குள் இருக்கும்.  வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது பொத்தனை அழுத்தியவுடன் கண்ணாடியில் 5 வினாடிகளுக்குத் தெரியும். பின்னர் பிரிண்டரில் உள்ள சீட்டு தானாக வாக்குப் பெட்டியில் போய் விழுந்துவிடும்.  இரண்டாவது முறையில் பிரிண்டர் வெளிப்படையாக இருக்கும். வாக்காளர் பொத்தானை அழுத்தியவுடன் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் சீட்டு வரும். அதை எடுத்து சரிபார்த்து வாக்காளர் வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.  இந்த புதிய முறை தொடர்பாக ஜூலை 20 முதல் 25-ம் தேதி வரை 5 தொகுதியில் மாதிரி தேர்தல் நடத்தப்படும் என்றார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக