உருதுக் கழகத்திற்கு உருது அறிஞர்களையே நியமிக்கும் முதல்வர் தமிழ் அமைப்புகளில் பொறியாளர்களையும் தமிழ் அறியாதவர்களையும் நியமிப்பது ஏன்? தமிழைக் கலந்து பேசத் தெரிந்தவர்களையெல்லாம் தமிழறிஞர்கள் என்பதா? உடனே தமிழ் அமைப்புக்கள் அனைத்திலும் தமிழ் அறிஞர்களையே நியமிக்கும் வகையில் மாற்றாணை பிறப்பிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 22: தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்டார்.இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:உருதுமொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 2000-ம் ஆண்டு ""தமிழ்நாடு மாநில உருது அகாதெமி'' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அகாதெமியின் ஆட்சிக்குழு கடந்த 2007-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாதெமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆட்சிக் குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், சென்னை பல்கலைக்கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் நிசார் அகமது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது மொழித் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி.அகமது பாஷா, கிருஷ்ணகிரி முக்தார் பத்ரி, வாணியம்பாடி முகம்மது யாகூப் அஸ்லாம், சென்னை மீயாஸி உருது அகாதெமி தலைவர் முகம்மது அஷ்ரப், கோவை அஞ்சுமன்-இ-உருது நிறுவனச் செயலாளர் சையத் பைய்ஸ் காதிரி, சென்னை மாலிக்குல் அசீஸ், சென்னை புதுக்கல்லூரி உருதுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.மசாஃபருதீன், சென்னை கே.எம்.அஷ்பகூர் ரகுமான், கோவை கலீம், சென்னை அலீம் சபா நவீதி, சென்னை பல்கலைக்கழக உருதுத் துறை பேராசிரியர் சஜ்ஜத் உஸ்ûஸன், வாணியம்பாடி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக கல்வி மையப் பொறுப்பாளர் சுகைல் அகமது, சென்னை எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லூரி உருது மொழித் துறை தலைவர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக