அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கும் தமிழ் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் பணியமர்த்த முறையை மாற்றவும் நேர்மையான பணியாளர் தெரிவுகளையே நடைமுறைப்படுத்தவும் அனைத்துப் பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுப்பார்களாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழே விழி! தமிழா விழி!)
First Published : 21 Feb 2011 06:01:47 PM IST
சென்னை, பிப்.21- தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக ஆளுநரின் பரிந்துரையின் பேரில், டாக்டர் எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, டாக்டர் பி. பெருமாள்சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை தமிழக அரசின் தலைமைச் செயலர் எஸ். மாலதி தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப். 21: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக போலீஸ் துறையைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஆளுநர் பர்னாலா வழங்கிவிட்டார். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், வி.ரத்தினசபாபதி, டாக்டர் பி.பெருமாள்சாமி, டி.குப்புசாமி, ஜி.செல்வமணி ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது உறுப்பினர்கள் 62 வயதை எட்டும் காலம் வரை பதவி வகிப்பார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பொறுப்பு என்ன? பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராக உள்ள டாக்டர் பி.பெருமாள்சாமி, இன்னும் ஒன்பது மாதங்களில் ஓய்வுபெற உள்ளார். அவருக்கு வயது 58. தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 62 வயது வரை அவர் அந்தப் பதவியில் இருப்பார். உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள குப்புசாமி, ரத்தினசபாபதி ஆகியோர் காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் ஆவர். சென்னை விமான நிலையத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார் குப்புசாமி (56). ரத்தினசபாபதியும் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். ஜி.செல்வமணி (57) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக