செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இவற்றுள் பல தமிழ்ச் சொற்களே! சான்றாகக் கண்டு என்பது என்பது பிரிவைக் குறிக்கின்றது. உடலில் இருந்து முகத்தைப் பிரிக்கும் உறுப்பு  கண்டம் எனப்பட்டது. சிறு சருக்கரைக் கட்டிகள் கற்கண்டு எனப்படுகின்றன. கண்டந் துண்டமாக வெட்டுதல் என்பதும் இதனை உறுதிப்படுத்துகின்றது. கணு என்பது பிரிவைக் குறிக்கின்றது. கரும்புக் கணு என்று  கரு்ம்பின் பிரிவுப் பகுதியைக் குறிக்கிறது. நிலத்தின் பிரிவுகள் கண்டம் எனப்படுகின்றன. இவற்றைத் தனியே நான் பின்னர்க் குறிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

<தமிழே விழி! தமிழா விழி >


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக