செய்தியைப் படித்த பொழுது ஏற்பட்ட வருத்தத்தை விட ஆசிரிய உரையைப் படிக்கும் பொழுது சோகம் உள்ளத்தைத் தைக்கிறது. மரணத்தண்டனைக்கு உரிய செல்வாக்கு உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பாக வெளியே உலா வரும் பொழுது அப்பாவிகள் கொட்டடியில் சாகடிக்கப்படுகிறார்கள் என்பது நாட்டின் இழிதகைமையை உணர்த்தி உள்ளத்தைச் சுடுகிறது. உயிரோவியன் குறிப்பிட்டாற்போன்று பேரறிவாளன் குறித்தும் தனியே ஓர் ஆசிரிய உரை எழுத வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பொய்யான நிலைப்பாடு அகல ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் பணிக் குற்றங்களுக்குத் தனித் தண்டனை என்னும் நிலை வந்தால்தான் உண்மையிலேயே சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற நிலை வரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் <தமிழே விழி! தமிழா விழி!>செய்தியைப் படித்த பொழுது ஏற்பட்ட வருத்தத்தை விட ஆசிரிய உரையைப் படிக்கும் பொழுது சோகம் உள்ளத்தைத் தைக்கிறது. மரணத்தண்டனைக்கு உரிய செல்வாக்கு உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பாக வெளியே உலா வரும் பொழுது அப்பாவிகள் கொட்டடியில் சாகடிக்கப்படுகிறார்கள் என்பது நாட்டின் இழிதகைமையை உணர்த்தி உள்ளத்தைச் சுடுகிறது. உயிரோவியன் குறிப்பிட்டாற்போன்று பேரறிவாளன் குறித்தும் தனியே ஓர் ஆசிரிய உரை எழுத வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பொய்யான நிலைப்பாடு அகல ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் பணிக் குற்றங்களுக்குத் தனித் தண்டனை என்னும் நிலை வந்தால்தான் உண்மையிலேயே சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற நிலை வரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் <தமிழே விழி! தமிழா விழி!>
கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது. 18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான். ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார். இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம். யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா. இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை. இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம். நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி? ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம். இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!
கருத்துகள்
காங்கிரஸை இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் இருந்தும் ஒழிக்கப்பட வேண்டும்,அப்போது தான் இந்தியா உருப்படும், இன்னும் அதை விடுதலைகாக போராடிய கட்சி என்ற நோக்கில் பார்ப்பது மடமை,
By வெங்கடேஷ்
2/21/2011 9:48:00 PM
2/21/2011 9:48:00 PM
இலவசம் மட்டும் கொடுக்க முடியும், நாடே அழிந்தாலும் பரவாயில்லை. நம் நாட்டிம் கேடு எப்போது முடியுமோ?
By rajarajan99
2/21/2011 9:07:00 PM
2/21/2011 9:07:00 PM
அப்படியென்றால் அந்தகொலையை செய்தது யார் என்று தானே முன் வந்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவேண்டும் என்பது என் அவா. தவறுக்கு காரணர்கள் தண்டிக்கப்படவேண்டும் .
By எ.ஜோசப் செல்வராஜ்
2/21/2011 9:01:00 PM
2/21/2011 9:01:00 PM
வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் வர்கீஸ் நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஓட்டைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். நீதி பாலிக்க வேண்டியவர்களும், நீதியை நடப்பிலாக்க வேண்டியவர்களும் செய்யும் தவறுகள். கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி கிடந்தாலும் கோர்ட் புறக்கணிப்பு நடத்தும் வக்கீல்களும் இதற்கு காரணம். நல்ல மனதுடைய சகோதரி யாருக்கோ உதவி செய்யபோய் அது தனது சொந்த சகொதரனகிவிட்டது ஆண்டவனின் செயல். நவாஸ்.
By Nawaz
2/21/2011 8:44:00 PM
2/21/2011 8:44:00 PM
மாந்தநேயம் தழுவிய தலையங்கத்துக்கு பாராட்டுகள். இந்த மாந்தநேய வீச்சு இரண்டு மின்கலம்(பேட்டரி) வங்கி கொடுத்ததற்காக தூக்கு கொட்டரையில் சுமார் இருபது வருடங்களாக போராடிகொண்டிருக்கும் பேரறிவாளன் மீதும் விழட்டும்.
By உயிரோவியன்
2/21/2011 7:52:00 PM
2/21/2011 7:52:00 PM
இது மாதிரி அப்பாவி மனிதர்களை jail -லில் தள்ளுவதால் அவன் வேளிய வந்து திவிரவாத செயலில் ஈடுபட காரணமாக அமைந்து விடுகிறது.
By jinnah
2/21/2011 6:48:00 PM
2/21/2011 6:48:00 PM
Things are ok. But the last para about courts, I encounted one case for self two years back - general issues. Most of the Judges, Lawyers are relative. All the Lawyers companyes are one umberla. They want to make money out of it. None of the judges are interested to enquire the case throughly. Everytime they sows to postpone the hiring (just I experienced). Even the Genuine case they try to prolong. Then only they can make money out of it. Lawer. General people will get one stage fed-up. You can not pay other charges every time (not lawyer fees) which itself goes thousnads of rupees. If you keep Number One Lawyers on your case day, they the Judge will see his face, ask some questions. If you keep any secondary / third grade Lawyers, the available Judge will see him and ask him funny questions. This is practical I have seen in Delhi High Court and Delhi Supreme Court. If they act like this, how will cases will get final verdict. How Judges, sons/daughters, relatives, friends their compa
By psk
2/21/2011 6:28:00 PM
2/21/2011 6:28:00 PM
தலையங்கம் எழுதியும், இவர்கள் திருந்துவது இல்லை. இவர்களுக்கு நல்ல மருந்து பொது மக்கள் வீதிக்கு வந்து போராடவேண்டும்
By பிள்ளை
2/21/2011 6:26:00 PM
2/21/2011 6:26:00 PM
அரசை விட்டுவிடுங்கள் அது உழல் அமைப்பின் ஒரு அங்கம். உச்ச நீதிமன்றம் என்ன செய்துகொண்டிருக்கின்றது? இங்கே ராஜபக்ஷ செய்யும் கொடுமைக்கு ஒரு காரணம் உண்டு. இனவெறி. ஆனால் இந்திய அப்பாவி மக்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு யார் மீது பழி போடுவது? உச்ச நீதிமன்றம் நிமிர்ந்து இயங்காத வரை எந்தவொரு உழல் அரசை யாரும் தட்டிக்கேட்க முன்வரப் போவதில்லை.
By கருப்புசாமி
2/21/2011 4:42:00 PM
2/21/2011 4:42:00 PM
It is true that prisons are overcrowded.If you look at statistical data most of them may be remand prisoners without being charge sheeted.This can be looked into to analyze reasons for in filing charge sheets.The habitual offenders form a significant part of prisoners.More over process of reformation by keeping them engaged in labour takes a back seat for want of a vision and budgetary support.By lodging under trials without any trial,or speeding up process in courts costs a burden to exchequer and liberty of individual gets lost forever. The CAG report has pointed out deficiencies in Prison control few years back.This may be senn
By SIVAN
2/21/2011 4:34:00 PM
2/21/2011 4:34:00 PM
ippadi thanimai siraiyil adaikka padavendiya namathu arasiyalvaathigal police paathukaapudan kaaril valam varugiraargal. aanal appavigal siraiyil vaadugiraargal. namathu naadu alivu paathaiyil sendru kondirukkirathu.
By saravanan
2/21/2011 3:15:00 PM
2/21/2011 3:15:00 PM
தங்களின் தலையங்கம் நெற்றியில் அடித்தால் போல் உள்ளது. உண்மையில் தாங்கள் எதிர் கட்சியாக செயல்பட்டு மக்கள் சார்பாக கேள்வி கேட்க உரிமை உண்டு. பத்திரிகை என்பது நாட்டின் முதுகெலும்பு என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு. மேலும் வேறு ஒரு பத்திரிகையில் நான் இன்று ஒரு தலையங்கம் கண்டேன். ஐயோ கொடுமை. இதற்கு பத்திரிகை நடத்துவதற்கு தெருவில் பிச்சை எடுக்கலாம்.
By உண்மை
2/21/2011 2:33:00 PM
2/21/2011 2:33:00 PM
இந்திய சுயநலம் பேணும் இடமாகிவிட்டது. எப்படி சுதந்திர போராட்டம் நடந்தது? ஆச்சரியமா இருக்கு.
By Moorthy
2/21/2011 11:34:00 AM
2/21/2011 11:34:00 AM
இது ஒரு கொடுமையான நிகழ்வாகும். சந்தேகத்தின் பெயரில் பிடித்து ஒரு நிரபராதியை குற்றவாளியாக்கிய அந்த காவலர்களுக்கும் சரியான தண்டனையை வழங்கவேண்டும்.
By கிருஷ்ணா - தேனி
2/21/2011 11:16:00 AM
2/21/2011 11:16:00 AM
இங்கு யாருக்கும் பொது நலன் பற்றி எந்த கவலையும் கிடையாது.. தன் நலன் தன் குடும்பம் தன் தொப்பை... பற்றி எல்லோருக்கும் கவலை. இந்தியா எனும் நாடு மிக மோசமான சுய நலத்தின் ஓரு பண்பாட்டு அடையாளமாக மாறிவருகிறது. காரணம் அதன் கேடுகெட்ட தலைவர்கள் சோனியா குடும்பம், கருணாநிதி குடும்பம் போன்றவர்கள் அதற்கு உதாரணம்.
By தேவன்
2/21/2011 10:40:00 AM
2/21/2011 10:40:00 AM
இந்த மாதிரி அநியாயம் பண்ண போலீசாருக்கு என்ன தண்டனை ? இவர்களை பிடித்து சாகும் வரை சிறைச்சாலையில் போட வேண்டும்.
By சுகுமார் மங்களூர்
2/21/2011 10:14:00 AM
2/21/2011 10:14:00 AM
அரசு அதிகாரிகளும் தன கடமையிலிருந்து தவறினால் அவர்களின் வேலையை பறித்து அவர்களையும் SIRAIYIL தள்ள வேண்டும். அதே போல், காவதுரை ADHIKARIKALAIYUM சும்மா விடக் கூடாது. இது போன்ற சம்பவங்களுக்கு அவர்களே முற்றிலும் PORUPPU. அரசியல் வியாதிகள் தவறு செய்யுM பொழுது அவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாக மாறும் அளவிற்கு தண்டிக்கப் படவேண்டும். குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
By THANGAMANI
2/21/2011 10:08:00 AM
2/21/2011 10:08:00 AM
அப்பாவி மனிதர்கள் துருப்பிடித்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னால், ஒட்டிய கன்னங்களும், உலர்ந்த உதடுகளோடும் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும் பரிதாபமான காட்சி தான், கண்ணுக்கு தெரிகிறது. அப்பாவி மனிதர்களின் இந்த அவலத்துக்கு, முழு பொறுப்பும் காவல் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளையே சேரும். ஆவணங்கள் முறைப்படி சரி பார்க்கப்பட்டிருந்தால், இப்படி நடந்திருக்காது. மக்களுக்கு, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைவது அவ்வளவு நல்லது இல்லை.
By பி.டி.முருகன் திருச்சி
2/21/2011 9:44:00 AM
2/21/2011 9:44:00 AM
இப்படி இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது. இந்த புண்ணிய பூமியில் எல்லா கொடுமைகளும் சாத்தியம். நாமவர்களுக்கு கோவில் கும்பாபிஷஹங்களும் செவ்வாய் வெள்ளி உம்தான் எல்லாம். மனித உரிமை மீறல் என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத வெகுளி ஜனங்கள்!!!!!
By Rathnasingh
2/21/2011 9:17:00 AM
2/21/2011 9:17:00 AM
நினைத்தாலே பயமாக இருக்கிறது
By நலம் விரும்பி
2/21/2011 8:40:00 AM
2/21/2011 8:40:00 AM
இதற்க்குக் காரணம் என்ன என்றால் மேல் அதிகாரிகளுக்கு ஒரு கணக்குக் காட்ட அல்லது பெரிய இடத்திலிரிந்து வரும் ஆணைக்கு இணங்க காவலர்கள் யாரையாவது பிடித்து இவர்களே பணத்தையும் போட்டு இவர்தான் திருடினார் என்று காட்டி வருவதாலேயேதான் இது போன்ற தவறுகள் மிக மிக அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. தற்போது இந்த நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்த அந்த சகோதரிக்கு என்ன நடக்கப்போகிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். வந்தே மாதரம் Lion Dr S Sekar India
By Lion Dr S Sekar
2/21/2011 8:19:00 AM
2/21/2011 8:19:00 AM
" ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது " என்று நமது குற்றவியல் சட்டங்கள் சொல்வதாக கூறுவார்கள் . நெருக்கடிநிலைக்காலத்தில் மிசா கைதியாக சிறைவைக்கப்பட்ட ,சிட்டிபாபு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டதில் இறந்து போனார். ஸ்டாலினுக்கும் தாக்குதலினால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது . அதற்கு காரணமான சிறை வார்டன் வித்யாசாகர் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார் ,தண்டிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை . அரசியலில் தமக்கு வேண்டாதவர்களை பழி வாங்கும் ஒரு அங்கமாகவே சிறைச்சாலை பயன்படுத்தப்படுகிறது .
By மூர்த்தி
2/21/2011 7:42:00 AM
2/21/2011 7:42:00 AM
ஆசிரியர் அவர்களது கருத்து சுய உணர்வு கொண்ட அனைவரையும் உலுக்கும் என்பது உண்மையே! ஆனால், இன்று ஆளுக்கு இரண்டு ‘அலை பேசிகள்’; முடிந்தால் சட்ட ரீதியான துணையோடு ,’அவசரத்துக்கு’ இன்னொன்று; ஆடம்பரப் பொருட்களைத் தேடித்தேடிச் சேர்ப்பது, இவைகள்தாம் ‘மானுடத் தேவைகள்’ என்னும் மனோபாவம்........அதிகரித்துக் கொண்டிருக்கையில்...... நீதியையும், அடைப்படை மனித விழுமியங்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் எங்கே கிடைக்கிறது? உலகமயமாதலில்...... மானுடம் சிறுகச்சிறுகத் தன் இயல்பை இழந்து செத்துக்கொண்டிருகிறது . இதனை மாற்ற மீண்டும் ஓர் ‘யுகப் புரட்சி’ ஏற்படவேண்டும். இல்லையேல், இவ்வாறு மனம் வருந்தித் ‘தலையங்கங்கள்’ எழுதுவதைத் தவிர வேறென்ன செயதுவிட முடியும்?[www.sarvachitthan.wordpress.com]
By சர்வசித்தன்
2/21/2011 5:17:00 AM
2/21/2011 5:17:00 AM
unmai orubodhum dhandikapadakudadhu.
By ramkumar
2/21/2011 1:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/21/2011 1:06:00 AM