சரியான அறிக்கை. ஆனால், சிங்களத்திற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்தமையால் அங்கே பன்னாட்டவை தலையிட வில்லை. இங்கே லிவியாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளதால் தலையிடும். இன்னும் சொல்லப்போனால் அதன் தலையீட்டால்தான் கிளர்ச்சியே நடைபெறுகிறது. இரட்டை அளவுகோலை விட்டு வி்ட்டு உடனே சிங்களப் போர்க்குற்றவாளிகளையும் உடந்தைகளையும் கைது செய்து தண்டிக் க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி /
கொழும்பு, பிப்.25- லிபியா பிரச்னையில் ஐநா சபை தலையிட வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:2009-ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஐநா சபை தவறியதைப் போன்று, லிபியாவிலும் அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்ற தவறக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நா சபையிடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் "மூடிய கதவுகளின்" உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியது.ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா. சபையானது தற்போது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு அனுமதிக்கக்கூடாது. இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கவேண்டும். ஈழத் தமிழர்களை இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசின் தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் இன்று வரையில் தவறியிருப்பதும், இன்று லிபியாவின் தலைவர்களைப் போன்று, மனித குலத்திற்கு எதிராகப் பெரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு துணிச்சலையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே இலங்கையில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இதன் மூலம், ஐ.நா. சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராக குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
well said TGTE
By Veera
2/25/2011 8:10:00 PM
2/25/2011 8:10:00 PM