செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

5000 tamils in concentration camps:இலங்கைத் தடுப்பு முகாம்களில் 5000 தமிழர்கள்: ஐ.நா.

இந்திய அரசின் முழு ஒத்துழைப்பு இருந்தும் கண்ணி  வெடிகளை அகற்ற முடியவிலலையாம்.ஏனெனில் கண்ணி வெடிகள் விந்தைநிறைந்தனவாக உள்ளன. தமிழர்கள் காலடி பட்டால் வெடிக்கின்றன. ஆனால் தமிழர் இடங்களில் சிங்களர்களைக் குடிபுக அனுப்பும் பொழுது வெடிப்பதில்லை. என்ன செய்வது? வேறு வழியின்றிச் சிங்களக் குடியேற்றங்களாகத் தமிழ் நிலங்கள் மாற்றப்படுகின்றன. தமிழர் நிலம் முழுமையும் சிங்களர் நிலமாக மாறிய பின்பு கண்ணி வெடிகள் வெடிக்கா. ஆனால், அப்பொழுது தமிழர்களைத் திருப்பி அனுப்ப இடமே  இருக்காது. எனவே, வேறு வழியின்றித் தடுப்பு முகாம்களையே வாழ்நாள் முடிவு முகாம்களாக மாற்ற வேண்டி உள்ளது.  இப்படித்தான் சிங்களம் விளக்கம் கொடுக்கப் போகிறது! 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழே விழி! தமிழா விழி)



இலங்கை தடுப்பு முகாம்களில் 5000 தமிழர்கள்: ஐ.நா.


ஜெனீவா, பிப்.18: இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து 21 மாதங்கள் முடிந்த பிறகும் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று இலங்கைக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றி வந்த நீல் புஹ்னே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.    விடுதலைப் புலிகளாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த முகாம்களுக்கு ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றால்கூட செல்ல முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.    எனினும், சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருந்த வேறு 5 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றும் அவர் கூறினார்.    நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாக நிவாரண முகாம்களில் இன்னும் 18 ஆயிரம் பேர் தங்கியிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்தார்.
கருத்துகள்


திருக்குவளை தீய சக்தியே போற்றி மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி கனிமொழியின் தந்தையே போற்றி செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி தளபதியின் தந்தையே போற்றி மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி வீல் சேரில் வரும் வில்லனே போற்றி சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி ஈழத்தை அழித்த இதயமே போற்றி தமிழின துரோகியே போற்றி போற்றி
By Bose
2/20/2011 3:50:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக