செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

full pledged thamizh virtual university- C.M. announced: தமிழ் இணையக் கல்விக் கழகம் முழுமையான பல்கலைக்கழகமாகும்: முதல்வர் கருணாநிதி

தமிழ்க்காப்பு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று முழுமையான இணையப் பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றப்பட்ட இணைய கல்விக் கழகத்தை ஆக்குவதற்குப் பாராட்டுகள்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையக் கல்விக் கழகம் முழுமையான பல்கலைக்கழகமாகும்: முதல்வர் கருணாநிதி

First Published : 22 Feb 2011 03:45:29 AM IST


சென்னை, பிப். 21: தமிழ் இணையக் கல்விக் கழகம் முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.  கடந்த 1999-ம் ஆண்டு தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, இணைய வழியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.  அந்த அறிவிப்புக்கு இணங்க, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் இணையப் பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம், மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயம், மேற் பட்டயம், பட்டம், முதுகலை என்ற நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இணையப் பல்கலைக்கழகம் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதால் அதற்கு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் இல்லை. பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பொறுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனிடையே, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உண்மையிலேயே பல்கலைக்கழகமாக்க முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கோரப்பட்டது. சங்கங்களின் கீழ் பதிவு என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் பெயர் பன்னாட்டுத் தமிழ் பயிற்சி இணையம் என மாற்றப்பட்டு, பின்னர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என பெயர்  மாற்றம் பெற்றது.  நடவடிக்கை: இந்த நிலையில், இணையக் கல்விக் கழகத்தை, முழுமையான பல்கலைக்கழகமாக மாற்ற போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பது: தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களையும், தமிழ்மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு போன்றவைகளையும் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக் கழகங்களைப் போல முழுமையான பல்கலைக் கழகமாக நிலை உயர்த்தப்படும். அதற்கெனச் சட்டம் இயற்றுவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக