புதன், 26 மே, 2010

டாலினை வரவேற்க வராத மதுரை திமுக பிரமுகர்கள்



மதுரை, ​​ மே 25: ​ ​ ​ ​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம் மதுரை வந்தார்.​ ஆனால்,​​ அவரை விமான நிலையத்தில் வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் வரவில்லை.திருநெல்வேலி பகுதியில் புதன்கிழமை நடைபெறும் கட்சிப் பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார்.​ சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 8.30 மணிக்கு விமானத்தில் வந்த அவர் பின்னர் காரில் திருநெல்வேலி சென்றார்.மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,​​ தங்கம் தென்னரசு ஆகியோர் வந்தனர்.​ மதுரையில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கமும்,​​ முன்னாள் மாநகர் மாவட்டச் செயலர் வ.வேலுச்சாமியும் வந்திருந்தனர்.ஆனால்,​​ மதுரை பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலர்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள்,​​ எம்.பி.க்கள்,​​ மதுரை மேயர் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் யாரும் மு.க.ஸ்டாலினை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை.​ மதுரை திமுக மாவட்டச் செயலர்கள் உள்ளூரில் இல்லை என்றும் கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர்,​​ மதுரை சரக டி.ஐ.ஜி.​ மற்றும் எஸ்.பி.​ உள்ளிட்டோர் துணை முதல்வரை வரவேற்றனர்.மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக மட்டுமின்றி திமுகவின் பொருளாளராகவும் உள்ளார்.​ இந் நிலையில் அவரை மதுரை பகுதி திமுகவினர் வரவேற்க வராதது கட்சி வட்டாரத்தில் ​ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

யாரும் விமான நிலையத்திற்கு வருகை தந்துநேரத்தை வீணாக்க வேண்டா என நாளை ஓர் அறிக்கை வரலாமோ!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக