வெள்ளி, 28 மே, 2010

ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!

Prabakaran5ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!

புன்னியாமீன்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 மே 19 ஆம் திகதி காலை நந்திக்கடல் ஏரியிலுள்ள சிறுதிட்டில் இடம்பெற்ற சண்டையின் போதே மரணமடைந்துள்ளார். மரணமடையும் வரை சண்டையிடுவது அவரின் இறுதித் தெரிவாக இருந்தபோதும் மற்றொருநாள் போராடுவதற்காகத் தப்பிச் சென்று உயிர்வாழ அவர் விரும்பியிருந்தார்.

அவரின் மனதில் தப்பிச்செல்வதற்கான பல திட்டங்களைப் பிரபாகரன் கொண்டிருந்தார் என்று பேராசிரியர் ரொஹான் குணரட்ண கூறுகிறார்.சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவரான பேராசிரியர் ரொஹான் குணரட்ண மேற்கண்டாவறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக “எக்ஸ்பிரஸ்” பத்திரிகைக்கு குணரட்ண கூறியதாவது; முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மோதல் சூன்யப்பகுதிக்கு அருகே கிறிஸ்ரினா கப்பலை வரவழைப்பது பிரபாகரனின் துணிச்சலான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அக்கப்பலிலிருந்த சொப்பர் மூலம் கரையிலிருந்து அக்கப்பலுக்குச் செல்வது அவரின் திட்டமாக இருந்தது.

இந்தக் கப்பலைக் கனடாவிலுள்ள ரவிசங்கர் கனகராஜா அல்லது சங்கிலி ஏற்பாடு செய்திருந்தார். அதனை இந்தோனேசியாவில் தயாராக வைத்திருந்தார். ஆனால், சொப்பரை ஏற்பாடு செய்வதற்குப் பொறுப்பாக இருந்த அச்சுதரன் என்பவர் அதனைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார் என்று குணரட்ன கூறியுள்ளார். யுத்தத்தின் பின்னர் கிறிஸ்ரினா கப்பல் இலங்கைக் கடற்படையால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மோதல் சூன்யப்பகுதியிலிருந்து வெளியேறி தென்பகுதியிலிருந்த யால சரணாலயப் பகுதிக்குச் செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது. குறைந்தளவிலான ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும் தென்பகுதி கரையைப் பயன்படுத்தி தீவிலிருந்து தப்பிச்செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது.

மூன்றாவது தெரிவாக ராமின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களுக்குத் தப்பிச் செல்வது இருந்துள்ளது. கிழக்கில் 2007 இல் யுத்தத்தில் தோல்வியடைந்தபோதிலும் ராம் தப்பியிருந்ததாக குணரட்ண கூறியுள்ளார். ஆனால், இலங்கைப் படையினர் சகல கடல், தரை மார்க்கப் பாதைகளைத் தடைசெய்திருந்ததால் இந்த மூன்று தெரிவுகளையும் பயன்படுத்தியிருக்க முடியவில்லை.

மே 16 இல் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அத்துடன், கடற்படையின் தடைகளையும் உடைத்துக் கொண்டு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, நான்காவது தெரிவாக இருந்தது வன்னிக்காட்டுக்குள் செல்வதாகும். நந்திக்கடல் ஏரியின் மேற்குக் கரையோரம் இலங்கைப் படையின் பிரசன்னம் கடுமையாக இருந்தது. அதனை உடைத்துக் கொண்டே வன்னிக்காடுகளுக்குள் செல்லவேண்டியிருந்தது. வாபஸ் பெற்று செல்வதற்கு முன்னர் அங்கு ஆயுதங்களைப் புலிகள் புதைத்து வைத்திருந்தனர்.

பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனி ஆகியோர் தலைமையில் 140 பேர் கொண்ட புலிகள் முதலில் அகதிகளாக வரும் பொதுமக்கள் போன்று உடைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உடனடியாக கடுமையான தாக்குதல்களை மேற்கொணடனர். 30 தற்கொலை குண்டுதாரிகள் படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இராணுவத்தின் முன்னரங்க நிலையை புலிகள் உடைத்தபோதிலும் அவர்கள் அழிக்கப்பட்டனர். பொட்டு அம்மானும் சார்ள்ஸ் அன்ரனியும் இறந்தவர்களில் உள்ளடங்கியுள்ளனர். மற்றொரு முனையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், இராணுவப்பிரிவு பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர். சர்ச்சைக்குரிய இச்சம்பவம் தொடர்பாக 2009 மே 24 இல் “சண்டே ஒப்சேவர்” பத்திரிகை கூறியிருப்பதாவது;

“சரணடைவதற்கான தமது விருப்பத்தை அவர்கள் வெளியிட்டதாக ஊகங்கள் காணப்பட்டபோதும் அது தொடர்பாக எதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டு கொல்லப்பட்டனர்.

அதேசமயம் பிரபாகரனும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களும் நந்திக்கடல் ஏரியின் கரையோரம் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கரைய வெள்ளிமுள்ளிவாய்க்காலுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். ஒரு கட்டத்தில் அகதிகளான பொதுமக்களுடன் கலந்து ஏரியைத் தாண்டிச்செல்ல முடியுமென கருதிச் சென்றனர். ஆனால் கடும் பசியுடனிருந்த பிரபாகரன் ஏரிக்குச் சென்று அங்குள்ள திட்டில் புகலிடம் தேடியிருந்ததாகவும் மே 18 இரவை அங்கேயே கழித்ததாகவும் “நேசன்” வாரப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

அவரின் முழங்கால் மட்டத்திலிருந்த சேற்றுநீரில் அவர் நின்ற போது கிரனேட் ஒன்று அவரின் மார்பை தாக்கியுள்ளது. துவக்குச்சூடு அவரின் மண்டையோட்டினூடாக சென்றுள்ளது. மே 19 இல் காலை 10 மணியளவில் விஜயபாகு படையணியைச் சேர்ந்த படையினர் சேற்றுடன் காணப்பட்ட அவரின் உடலைக் கண்டுபிடித்தனர்.

1 response | மே 23rd, 2010 at 8:04 pm under BreakingNews, அரசியல், அரசியல், இலங்கை

One Response to “5ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!”

  1. Ilakkuvanar Thiruvalluvan
    3:51 am on மே 28th, 2010

    தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனைப் பாராட்டுவதுபோல் அவர்இறந்துவிட்டார் என்னும் செய்தியைப் பதிவு செய்வதற்காகததரப்பட்டது இந்தச் செய்தி. தப்பிச் செல்ல விரும்பினார் என்றால் தப்பிச் செலலமுடியாமல் மரணமடைந்தார் என்பதுதானே பொருள். எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. போராளிகளின் உடல்களையெல்லாம் பண்பாடு கெட்ட முறையில் நாசம் செய்த சிங்களமும் துணைநின்ற இந்தியமும் வீரத்தலைவர் சிக்கினார் எனில் சும்மா இருந்திருப்பாரகளா? எனவேதான் சொல்கிறோம் . இறந்ததாகக் காட்டப்பட்டாரே தவிர அது அவரல்ல! வெல்க தமிழ் ஈழம்! மேதகு பிரபாகரன் தலைமையில் விரைவில் தமிழ ஈழக் குடியரசு அ‌மைக! அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்


1 கருத்து:

  1. உண்மையில், பிரபாகரனைப் பற்றிய எந்த செய்திகளையும் நம்ப முடியவில்லை.

    பதிலளிநீக்கு