வியாழன், 27 மே, 2010


கல்வி நிறுவனங்களில் மதரீதியாக பாகுபாடு: தமிழகம் முழுவதும் ஜூலையில் பாஜக ஆர்ப்பாட்டம்: இல.கணேசன்



கோவை, மே 26: கல்வி நிறுவனங்களில் மதரீதியாக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். ÷கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:÷சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கான படிவத்தில் வருமானம் குறித்த எவ்விதத் தகவலும் கேட்கப்படவில்லை. ஆனால், இந்து மாணவர்களுக்கு வருமானம் அடிப்படையிலேயே, குறைந்த மாணவர்களுக்கே, குறைவான தொகையே உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. ÷முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், பிற மதத்தினருக்கும் அதேபோல வழங்க வேண்டும். இல்லையெனில் பொருளாதார அடிப்படையில் உதவித் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.÷இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோவையில் ஜூலை 18-ல் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.÷மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, பணவீக்கத்தைக் குறைக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்குச் சென்றுவிட்டது. ÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அரசியல் மாநாடு அல்ல என்பதால் அதை பா.ஜ.க. வரவேற்கிறது. மேலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறுவதில் பா.ஜ.க.வின் முயற்சியும் இருந்தது. ÷வரும் பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளைத் துவக்கியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

நம்நாடு மதச்சார்பற்ற நாடு அன்று. பல்சமயச் சார்பு நாடு. இந்த நிலை மாறவேண்டும். சிறுபான்மையர் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனரோ அத்தனை விழுக்காட்டு அளவில்தான் மொத்தக் கல்விக் கூடங்களில் சிறுபான்மைக் கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். சான்றாகப் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும மேலானவை தெலுங்குச்சிறுபான்மையர் என்ற போர்வையில் நடததப்படும் தெலுங்கர் கல்வி நிறுவனங்களே. சமயத்திற்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழர் சமயம் சிறுபான்மையாகி விட்டதால் தாய்ச் சமயத்தையும் தாய் மொழியையும் ஊக்குவிக்கும் வகையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழர் சமயம் எனக்குறிப்பவர்க்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். பிற சமயங்களின் ஆதிக்கம் நம் நாட்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று, நாகரிக, மொழிச் சிறப்புகளை அழிக்கின்றன என்பதை உணர வேண்டும். ஐரோப்பியக் கிறித்துவர்கள் தமிழ்ச்சிறப்பைப் போற்றினார்களே தவிர தமிழர் சமயத்தைத் தழுவவில்லை. பிற சமயங்களின் சிறப்புகளைப் போற்றும் மனப் பக்குவம் வேண்டும். ஆனால், சமய மாற்றம் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக