சென்னை, மே 24: இலங்கையில் தமிழர்களுக்கு இப்போது பிரச்னை இல்லை என்று தமிழ் முஸ்லிம் எம்.பி. அப்துல் காதர் தெரிவித்தார். இலங்கையின் சிறந்த அதிபராக ராஜபட்ச செயல்பட்டு வருவதாகவும், அவர் தமிழர்கள் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் முஸ்லிம் எம்.பி.யான அப்துல் காதர் (74), இலங்கை கண்டித் தொகுதியில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் இதற்கு முன்பு ரணில் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். மருத்துவ சிகிச்சைக்காக இரண்டுநாள் பயணமாக சென்னை வந்த அப்துல் காதர் எம்.பி. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில் மக்களின் மன நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. போர் நடந்தால் உயிர்ச்சேதம் இருக்கத்தான் செய்யும். இதைக் கணக்கில் கொண்டு இலங்கை அரசு, தமிழர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்தது என்று கூறுவதை ஒத்துக் கொள்ள முடியாது. இப்போது அங்குள்ள தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இலங்கையில் புலிகளால் மீண்டும் போர் ஆபத்து இல்லை. புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை. இதை கருணா நேரில் பார்த்து உறுதி கூறியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் நான் இருந்தாலும், அரசின் நல்லத் திட்டங்களுக்கு ஆதரவுடன் செயல்படுவேன். பால், அரிசி, துணி என அனைத்து வகை அத்தியாவசியப் பொருள்களுக்கும் இறக்குமதியை நம்பித்தான் இலங்கை உள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று நம்புகிறேன். அதைத் தொடர்ந்து விலைவாசி குறைய வாய்ப்புள்ளது. இலங்கைக்கு இப்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதன் பிறகு இந்திய- இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு இல்லைஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு வந்ததா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. அழைப்பு வந்தால் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். அந்த சமயத்தில் இலங்கையில் மக்களவைக் கூட்டம் நடந்தாலும் நான் நிச்சயம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வேன் என்றார் அப்துல் காதர்.
கருத்துக்கள்
இலங்கைத் தமிழ்ப் பகுதியில் ஒரு பாகித்தானை உருவாக் எண்ணும் தன்னைத் தமிழினம் என ஏற்றுக் கொள்ளாத இசுலாமிய வெறியர் தமிழர்களைப் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? அவருக்குரிய ஒரே சிக்கல் கட்சி மாறி எவ்வாறு அமைச்சர் பதவி பெறுவது என்பதுதான். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 5/25/2010 3:56:00 AM