இலங்கை க் கடற்படையுடன் கூட்டு ப் பயிற்சி தென் மாநிலங்களை த் தவிர்க்க அறிவுரை
புதுடில்லி:இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு,
தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடற்படை கூட்டு
பயிற்சியை நடத்துவதற்கு நான்கு தென் மாநிலங்களை தவிர்க்கும்படி ராணுவ
அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சியை, இதற்கு முன் இரண்டு முறை நடத்தியுள்ளது. முதலாவது பயிற்சி,2005ம் ஆண்டும், அதை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி, 2011ம் ஆண்டு திரிகோணமலையில் நடந்தது.
இந்நிலையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும்எதிர்ப்பு வருகின்றன. எனவே கடற்படை கூட்டு பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சகம் இந்திய கடற்படைக்கு விடுத்த வேண்டுகோளில்," இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சியை நடத்த தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில கடலோர பகுதியை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு பயிற்சி, இம்முறை இந்திய கடல் பகுதியில் நடத்தப்பட வேண்டும். இதையடுத்தே, ராணுவ அமைச்சகம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.
- தினமலர்இந்திய - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சியை, இதற்கு முன் இரண்டு முறை நடத்தியுள்ளது. முதலாவது பயிற்சி,2005ம் ஆண்டும், அதை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி, 2011ம் ஆண்டு திரிகோணமலையில் நடந்தது.
இந்நிலையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும்எதிர்ப்பு வருகின்றன. எனவே கடற்படை கூட்டு பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சகம் இந்திய கடற்படைக்கு விடுத்த வேண்டுகோளில்," இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சியை நடத்த தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில கடலோர பகுதியை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு பயிற்சி, இம்முறை இந்திய கடல் பகுதியில் நடத்தப்பட வேண்டும். இதையடுத்தே, ராணுவ அமைச்சகம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக