உணவு ஒரு கனவா: இன்று உலக உணவு நாள்
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும்
வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்
அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "விவசாயத்துக்கு
ஒத்துழைப்பு: "உலக உணவு உற்பத்திக்கு வழி' என்பது, இந்தாண்டு மையக்
கருத்து.
ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மூன்று கோடி:
உலகில்
85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும்
பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும்
நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின்
எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க
முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள்
அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு
பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.
உணவு கிடைக்குமா:
வளரும்
நாடுகளில் நிலவும் விலைவாசியால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி
உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது, கடினமான
விஷயமாகிறது. உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப்
பொருட்களின் விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச விருது:
உலகளவில்
அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும்,
ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல்
வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற
அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது
பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை
எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை
பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக