வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஓவியக் கண்காட்சி: ஆதிதிராவிடர்படைப்பாளிகளுக்கு அழைப்பு

ஓவியக் கண்காட்சி: ஆதிதிராவிடர்படைப்பாளிகளுக்கு அழைப்பு

First Published : 19 October 2012 01:58 AM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கான ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமைகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அதற்கிணங்க தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்கள் சிறந்த படைப்புகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
படைப்புகளை அனுப்பும்போது அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தோர் என்பதற்கான சான்றினையும் இணைத்து அனுப்ப வேண்டும். படைப்புகள் அந்தந்த மாவட்டங்களில் காட்சிக்கு வைக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாவது தளம், ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை - 600 008. தொலைபேசி எண் 044-2819 3195. இந்தக் கண்காட்சி வைப்பதற்கான அனைத்து ஏற்பாட்டுக்கான செலவினத்தையும் அரசு விதிகளுக்குட்பட்டு கலை பண்பாட்டுத் துறையே ஏற்றுக்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக