ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சென்னை-திருவனந்தபுரம் குண்டுத் தொடரிப் (புல்லட் ரயில்) பாதைக்கு ஒப்புதல் - che-trvm bullet train,



சென்னை-திருவனந்தபுரம்  குண்டுத்  தொடரிப் (புல்லட் ரயில்) பாதைக்கு ஒப்புதல்


புதுடில்லி:சென்னை - திருவனந்தபுரம் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க சாதகமான வாய்ப்புகள் உள்ளது, என, ஆய்வு நடத்திய ஜப்பான் குழு ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை - திருவனந்தபுரம் இடையே, பெங்களூரு, கோவை, எர்ணாகுளம் வழியாக, 850 கி.மீ., தூரத்திற்கு, புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான, சாதக வாய்ப்புகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.இதன்படி, ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, இக்குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், அளிக்கப்பட்ட தொழில்நுட்ப குறிப்புகள், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.ஜப்பான் குழு அடுத்த அளிக்கும் அறிக்கையில், திட்டத்திற்கு ஆகும் செலவு உட்பட நிதி விவரங்கள் அடங்கிய மதிப்பீடு இருக்கும்.

இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பாதைகளில் மட்டும் புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக