சனி, 20 அக்டோபர், 2012

பெரியாறு அணையில் பீதி கிளப்பும் கேரளா சோதனை என்ற பெயரில் மீண்டும் நாடகம்

பெரியாறு அணையில் பீதி கிளப்பும் கேரளா சோதனை என்ற பெயரில் மீண்டும் நாடகம்
 
கூடலூர்:பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதைத் தொடர்ந்து, வண்டிப்பெரியாரில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக, அபாய ஒலி (சைரன்) எழுப்பி, கேரள அதிகாரிகள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்."பெரியாறு அணை உடைந்து விடும்' என, புரளி கிளப்பி, மக்களிடம் பயத்தை ஏற்படுத்த, கேரள அதிகாரிகள் பல்வேறு நாடகங்களை கையாண்டு வருகின்றனர். அணை உடைந்து, அங்குள்ள மக்கள் நீரில் மிதப்பது போல், "கிராபிக்ஸ்' செய்து, சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பினர்.கன மழை நேரங்களில், அணை உடையும் அபாய நிலையில் இருப்பதாகக் கூறி, அருகில் வசிக்கும் மக்களை, உயரமான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, தங்க வைத்து, பீதியை ஏற்படுத்தினர். இது தவிர, கேரள அரசியல்வாதிகள் அடிக்கடி அணையைப் பார்வையிட்டு, அணை அபாய நிலையில் இருப்பதாக, பேட்டி கொடுத்தனர்.இதன் அடுத்த கட்டமாக, அணை உடைந்து விட்டால், உடனடியாக தெரிவிக்கும் வகையில், வண்டிப்பெரியார் மற்றும் உப்புத்துறையில், "சைரன்' பொருத்தினர். "சைரன்' ஒலிக்கும் போது, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும் என, அச்சத்தை ஏற்படுத்தினர்.தற்போது, நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், "சைரன்' ஒலி எழுப்பி, கேரள அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இது, அப்பகுதியினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த ஐவர் குழுவினர், அணையில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து விட்டனர். இதுகுறித்த தீர்ப்பு, விரைவில் வர உள்ளது.வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் கேரள அதிகாரிகளின் சதிச் செயலை முறியடிக்க, தமிழக அரசு, மேலும் ஒரு வழக்கை தொடர வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக