அதிவேகத்தில் ஓடும் குழந்தைகள் தள்ளுவண்டி
கைக்குழந்தைகளை அமரவைத்து கொண்டு செல்வதற்காக பல
பெற்றோர்கள் குழந்தைகள் தள்ளுவண்டியை பயன்படுத்துகிறார்கள். இதனை நம்
நடைக்கு ஏற்றவாறு கைகளினால் தான் ஓட்டி செல்ல முடியும். ஆனால் இதிலும்
அமெரிக்காவிலுள்ள ஸ்டாம்போர்டை சேர்ந்த கோலின் புர்ஷி என்பவர் ஒரு புதுமையை
புகுத்தி இருக்கிறார்.
சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் 33 வயதாகும் அவர் மணிக்கு 50 மைல் வேகத்தில் அது ஓடும்படி வடிவமைத்துள்ளார். இதற்காக அந்த தள்ளுவண்டியில் 125 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் எந்திரத்தை பொருத்தி அதில் ஒருவர் நின்று கொண்டு ஆக்சிலேட்டர், கியர் மற்றும் பிரேக்கை இயக்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
இதன் சோதனை ஓட்டத்தை அவர் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இது பற்றி அவர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பை என்னுடைய காதலி மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். கரடுமுரடான சாலையாக இருந்தால் முழுவேகத்தில் செல்ல இயலாது. ஆனால் இதுவரையில் நான் ஓட்டி சென்றதில் விபத்து எதுவும் நிகழவில்லை. இதனை வடிவமைக்க சுமார் ரூ.36 ஆயிரம் செலவானது என்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக