புதன், 17 அக்டோபர், 2012

தோல்வி தான் திருப்பு முனை


சொல்கிறார்கள்

"தோல்வி தான் திருப்பு முனை!'"பார்முலா 4' கார் பந்தயத்தில், முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த, 14 வயதான, சூர்யா: எனக்கு, ஆறு வயதிருக்கும் போதே, கார் ஓட்டக் கற்றுக் கொடுத் தார் என் அப்பா.என் பார்வையும், மனதும், ரேஸ் கார்கள் மீது குவிந்ததால், சொந்தமாகவே, ரேஸ் கார் வாங்கித் தந்தார் அப்பா.அதன் பின், ரேஸ் கார் பயிற்சி பெற்றேன். உடற்பயிற்சியிலும், தீவிரமாக ஈடுபட்டேன்.ஏழு வயதில், கோவையில் நடந்த கார் ரேசில், முதன் முதலாக பங்கேற்றேன். அந்த ரேஸ் தான், என்னை வெளியுலகிற்குக் கொண்டு வந்தது.அதுவே பெரிய திருப்பு முனையாகவும் அமைந்து விட்டது. அந்த முதல் கார் பந்தயத்தில், எனக்கு ஏற்பட்ட தோல்வியே காரணம்.அந்தப் போட்டி, எட்டு முதல், 13 வயதிற்குள் உள்ள பிரிவினருக்கானது. என் ஏழு வயதில், சிறப்புத் தகுதிகள் அடிப்படையில், போட்டியாளராக அனுமதித்தனர். இந்தியாவிலேயே, மிக இளம் வயதில், கார் ரேசில் பங்கேற்ற சிறுவன் என்ற, "ரெகார்ட்' பதிவானது. அந்தப் போட்டிக்கு, பார்வையாளராக வந்த, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், "தொடர்ந்து பயிற்சி செய்; உன்னால் முடியும்' என்று கூறிய வார்த்தை தான், என்னை ஊக்கப்படுத்தியது.முன்னாள் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கர், ஜெர்மனியில் நடத்தி வரும், பயிற்சிப் பள்ளியிலும், பிரேசில் மற்றும் மலேசியாவிலும் சிறப்பு பயிற்சி பெற்றேன்.கடுமையான உடல் பயிற்சி மேற்கொண்டால் தான், காரின் அதிர்வுகளைத் தாங்க முடியும். இல்லாவிடில், ரத்தக்கட்டு அல்லது நெஞ்சில் வலி வந்துவிடும். சாதாரண கார்களை ஓட்ட, ஆர்வம் போதும். ஆனால், ரேஸ் கார் ஓட்ட, ஆர்வத்துடன் உடல் பலம், மனோபலம் இரண்டும் அவசியம். என் பயிற்சியாளர் இப்ராஹிமின் ஊக்குவிப்பு, என்னை வெற்றியை நோக்கி நகர்த்தியது.கார் பந்தயங்களில், தேசிய அளவில் பல சாதனைகள் புரிய வேண்டும்; சர்வதேச அளவிலான பந்தயங்களில், முத்திரை பதிக்க வேண்டும். இது தான் என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக