பழங்கால இசைக்கருவிகளின் அணிவகுப்பு - எல்.முருகராசு
கடந்த வாரம் சென்னையில் "கைவளம்' என்ற தலைப்பில் சர்வதேசச அளவிலான
கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியின் ஒரு பகுதியாக
பழங்கால இசைக்கருவிகள் பல இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியின் பொறுப்பாளராக இருந்த கோபால் அங்கு இருந்த
இசைக்கருவிகள் பற்றி விவரித்துக்கூறியதுடன் இசைத்தும் காட்டிய போது பெரும்
வியப்பு ஏற்பட்டது.
ராஜாக்கள் காலத்தில் வாசிக்கப்பட்ட சாகோட யாழ்,வேட்டையாட காட்டில்
போகும்போது களைப்பு தீர்க்க வாசிக்கப்படும் வில்லும்,அம்பும் போன்ற வடிவில்
இருக்கும் வில்யாழ்,வயலின் இசையை ஒரு குழல் மூலம் வெளிப்படுத்தும்
ஐரோப்பியரின் போனோ வயலின்,ஒம் என்ற ஒலி எழுப்பும் பிரணவ காந்தா மணி,இரவு
நேர சுவாமி உலாவின் போது வாசிக்கப்படும் சந்திர பிரபை மேளம்,மூன்று பக்கம்
வாசிக்கக்கூடிய புஷ்கரம் எனப்படும் மிருதங்கம்,தண்ணீர் இறைக்கும் கிணறு
வடிவத்தில் காணப்படும் ஜாமிதிக்கா இசைக்கருவி,மகர யாழ் என்று வித்தியாசமான
இசைக்கருவிகளின் பட்டியல் நீள்கிறது.
ஆறடி உயரத்திற்கு சாத்திவைக்கப்பட்டு ஒரு தம்புராவை இசைக்கவேண்டாம்,சரியான ரிதத்தில் சுற்றி விட்டாலே அற்புதமான இசை வருகிறது.
நாகப்பாம்பு வடிவிலேயே செய்யப்பட்ட நாகஸ்வரத்தை பயப்படாமல் எப்படித்தான் வாசித்தார்களோ.
ஒரு காலத்தில் இது போன்ற பழங்கால இசைக்கருவிகளை தயார் செய்யவும்,விற்பனை
செய்யவும் விரும்பி மத்திய அரசு சென்னையில் ஒரு மையத்தை
துவக்கியது.காலப்போக்கில் வாங்குபவர் இல்லாததால் இசைக்கருவிகள் தயாரிப்பு
நின்று போனது.இப்போது இருக்கின்ற இசைக்கருவிகளை அதன் தொன்மை குறையாமல்
பாதுகாத்து நிரந்தர பொருட்காட்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தங்களது
அரங்கில் வைத்துள்ளனர்.,விரும்பி கேட்கும் போது தங்களது இசைக்கருவிகளை
கொண்டுவந்து பொதுமக்கள் முன் கண்காட்சியாக வைக்கின்றனர்.
இந்த இசைக்கருவிகளை பார்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய போன் எண்கள்:9962907248 ,044-28592485.
குறிப்பு: இங்கே இசைக்கருவிகளை பார்க்க விரும்புபவர்கள் சிவப்பு பட்டையினுள் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக