தி.நகர்-கோடம்பாக்கத்தை இணைக்கும் இரங்கராசபுரம் மேம்பாலம்: செயலலிதா நாளை திறக்கிறார்
சென்னை, அக். 14-
சென்னையின் முக்கிய வணிக பகுதியாக திகழும் தியாகராயநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இங்கு வருவதற்கும் வடபழனி செல்வதற்கும் ஆற்காடு ரோட்டில் உள்ள கோடம்பாக்கம் மேம்பாலத்தைதான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நெரிசலை குறைக்க கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு இணையாக வடக்கு உஸ்மான் ரோட்டில் இருந்து கோடம்பாக்கத்துக்கு புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் ‘ஒய் வடிவில்’ இருபுறமும் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் ரோட்டில் இருந்து கோடம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை ஒரு பகுதி இணைக்கிறது. மற்றொரு பகுதி ரங்கராஜபுரம் வழியாக அசோக்நகருக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்டேஷன் ரோடு செல்லும் மேம்பால பாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேம்பாலத்தில் இருந்து ரங்கராஜபுரம் செல்லும் இன்னொரு பாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை நடக்கிறது.
இந்த பாலம் நாளை திறக்கப்பட்டதும் இருவழி பாதையாக போக்குவரத்து அமையும். இனிமேல் உஸ்மான் ரோட்டில் இருந்து வடபழனி, விருகம்பாக்கம் செல்ல கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு செல்லாமல் ரங்கராஜபுரம் பாலம் வழியாக எளிதில் செல்லலாம். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
மேற்கு மாம்பலம், அசோக்நகர், கே.கே.நகர் செல்பவர்களும் இந்த புதிய பாலம் வழியாக எளிதாக சென்று விடமுடியும். இதனால் துரைசாமி சுரங்கபாதையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக