புதன், 17 அக்டோபர், 2012

துப்பாக்கியைக் காட்டி இராமேசுவரம் மீனவர்களை விரட்டிய இலங்கைக் கடற்படை

துப்பாக்கியைக் காட்டி இராமேசுவரம் மீனவர்களை விரட்டிய இலங்கைக் கடற்படை

First Published : 17 October 2012 03:44 AM IST
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். மேலும் மீன்பிடி வலைகளை அரிவாளால் வெட்டி கடலில் மூழ்கடித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து அக்டோபர் 15-ஆம் தேதி சுமார் 600 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் இலங்கை கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர்.
பின்னர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மார்த்தாண்டம் என்பவரது விசைப் படகிலிருந்த மீன்பிடி வலைகளை அரிவாளால் வெட்டிக் கடலில் மூழ்கடித்தனர். இதனால் ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலால் நூறுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்காமல் ராமேசுவரம் கரைக்குத் திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக