நான் ஒரு மருத்துவ த் தூதர்: மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
சென்னை:"டெங்கு'
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்த, பள்ளி மாணவர்களை "மருத்துவ தூதராக' மாநகராட்சி அனுப்பி
வருகிறது.சென்னையில் "டெங்கு' காய்ச்சலால், மருத்துவமனைகளில் சிகிச்சை
பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு
குறித்து, பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த
மாநகராட்சி ஈடுபட்டுள்ளது."மருத்துவ தூதர்'மண்டல சுகாதார அதிகாரிகளால்,
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
அதில், "என் வீட்டிற்கும் தெருவுக்கும், நான் ஒரு மருத்துவ தூதர்' எனவும்,
மாணவ, மாணவியர் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற
விவரங்களும், குறிப்பிடப்பட்டுள்ளன.தூய்மையான நீரில்...அட்டையின்
மறுபக்கம், ஆட்டுக்கல், தேங்காய்ஓடு, வாழை மரம், டயர், வாளி, குளிர்
சாதனங்கள், திறந்த கிணறு, திறந்த மேல்நிலை தொட்டி, பூந்தொட்டி, அடைபட்ட
மாடிகள், பிளாஸ்டிக் கப் போன்ற படங்கள் அடங்கிய வாசகத்துடன் அட்டை
உள்ளது.
மேலும், இந்த பொருட்களில் தேங்கி நிற்கும், தூய்மையான நீரில் இருந்து, கொசு உற்பத்தியாகி, "டெங்கு' உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மண்டல நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:கொசு ஒழிப்பு குறித்து, தங்கள் வீட்டுக்கு மட்டுமில்லாமல், தெருவில் உள்ள அனைவருக்கும் மாணவ, மாணவியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக