305 ஆண்டுகளுக்குப் பின் இசுகொட்லாந்தை விடுதலை நாடாக அறிவிக்கக் கருத்துக்கணிப்பு
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.இதன் பிரகாரம் 305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக நடக்கவுள்ள கருத்துக்கணிப்புக்கான நிபந்தனைகளை முறையாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பல மாதங்களாக நடந்த கருத்தாடலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு 1707ஆம் ஆண்டில் யூனியன் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட ஸ்கொட்லாந்தின் பிரிவுக்கு வழிவகுக்கக்கூடும்.
2014 இலையுதிர் காலத்தில் வாக்கெடுப்பை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னரும் பின்னரும் எடின்பரோவின் இந்த இருவரும் கைகுழுக்கிக்கொள்வர்.
இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக ஆம் இல்லை என்ற ஒரு தெரிவை மட்டுமே வழங்கும். கமெருன் விரும்பாத போதிலும் 16 வயது இளைஞர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வர்.
இந்த ஒப்பந்தம், 5 மில்லியன் ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தும் அதிகாரத்தை ஸ்கொட்லாந்து அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
எட்வர்ட் ஐஐ மன்னரின் படைகளை ஸ்கொட்லாந்து இராணுவம் துவம்ஸம் செய்தபோது பனொக்பேண் யுத்தத்தின் 700 ஆண்டுகள் பூர்த்தியாவதால் 2014ஆம் ஆண்டு சிறப்புபெறுகிறது.
இப்போது நாம் செயன்முறைப் பற்றி கவனித்துவிட்டோம். ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதால் ஸ்கொட்லாந்தும் ஸ்கொட்லாந்துடன் இருப்பதால் ஐக்கிய இராச்சியமும் நன்மையடையும் என கமரொன் கூறினார்.
ஐக்கிய இராச்சியத்தை பேணவே, மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன் என அவர் மேலம் குறிப்பிட்டார்.
நன்றி http://tamil24news.com/news/?p=22490#more-22490
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக