கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்? பெ.மணியரசன் கண்டனம்

 அகரமுதல

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில்

கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்த பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம்  ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் மகுடை(கொரோனா) நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான நேர்ச்சியில்(விபத்தில்) 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாய மடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலைக்கு 10 நூறாயிரம் உரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்குத் தலைக்கு 5 நூறாயிரம் உரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. கேரள முதலைமச்சர் கோழிக்கோடு மருத்துவமனைக்குச் சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாற்றில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளைப் பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வருக்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் மா.பொ.க.(சி.பி.எம்.) முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல்  இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விசயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்குச் செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு  25 நூறாயிரம் உரூபாய் வீதம் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற நேர்ச்சிகள்(விபத்துகள்) இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு இடைக்கால மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

 


ஞாயிறு, 4 நவம்பர், 2018

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

அகரமுதல

சங்கத்தமிழ் நகரம் முசிறியே

கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

“சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்?
நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த கள ஆய்வில், கொடுங்கலுார், பரனுார், பட்டணம் முதலான அமைதியான ஊர்களில், சங்கக் காலச் சான்றுகள் கிடைத்தன. அதனால்தான், பட்டணத்தில் அகழாய்வு செய்யத் தீர்மானித்தேன்.பட்டணத்தில், 2006 முதல், 2016 வரை, 10 முறை, அகழாய்வு செய்துள்ளேன்.
இந்தியப் பல்கலைகள் மட்டுமின்றி, ஆக்சுபோர்டு, உரோம் முதலான, உலகின் புகழ்பெற்ற பல்கலைகள்-அருங்காட்சியக வல்லுநர்களுடன் இணைந்து, அகழாய்வில் ஈடுபட்டேன்.
பட்டணத்துக்கு, நீங்கள் இவ்வளவு முதன்மை தரக் காரணம் என்ன?
உலகில் மிகவும் வளமான நாடுகளாக கருதப்பட்ட, உரோம்  முதலான அனைத்து நாடுகளுடன், வணிகத் தொடர்புடைய துறைமுக நகராக, முசிறி இருந்துள்ளது. இதற்குச், சங்க இலக்கியங்களிலும், உரோமானிய இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன. இது, இப்போதைய கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை, பெரியாற்றின் டெல்டா பகுதியில், பரவூருக்கு அருகே, 2 புதுக்கல் தொலைவில் உள்ளது.
சரி, அதை மெய்ப்பிக்கும் வகையில், நீங்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் எவை?
உரோமானியர்கள், கிரேக்கர்கள், பழமது(ஒயின்) போன்ற மதுபானங்களைக் கெடாமல் சேமித்து வைக்க, ‘ஆம்போரா’ என்ற, மண் குடுவைகளைப் பயன்படுத்தினர். அந்தக் குடுவைகள், பட்டணம் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன.
பெரிய மனிதர்களின் சமூகத் தகுதியை வெளிப்படுத்த, அழகு சாதனமாக வைக்கப்பட்ட மண்பாண்டங்கள், நறுமணப்புகை பரப்பும் சாடிகளும் கிடைத்தன. மேலும், சீன மட்பாண்ட(செராமிக்கு)  வகைப் பாத்திரங்கள், தாவர விலங்கியல் பரவலுக்கான மரபுச்சான்றுகள், சங்கக்கால சேர, உரோமானிய நாணயங்கள், பானை ஓடுகள்(‘டெர்ரா சிகிலேட்டா’), பலவித மணிகள் எனப், பல ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன. கீழடியில் கிடைத்தது போல், செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.
பட்டணத்தில் கிடைத்த, பொருட்களின் கால அளவைக் கணித்தீர்களா?
ஆம். அவை, கி.மு., 300 முதல் 500 வரை இருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்குமான தரவுகளை, சங்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே, காண முடிகிறது.
கிடைத்த தொல்பொருட்களில் இருந்து, நீங்கள் கருதும் கலை, பண்பாட்டுஅடையாளம் குறித்து?
 தமிழர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன், தனித்த  கலை, பண்பாட்டு அடையாளத்துடன் வாழ்ந்துள்ளனர். அங்குப், பெண்களுக்குப் பெரும் சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகள், சிப்ரால்டர், சுபெயின், ஆப்பிரிக்கா முதலான பல்வேறு பகுதிகளுடன் வணிகம் செய்துள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியாகி உள்ளன. இதற்கான சான்றுகள், எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. குறிப்பாகத், தென் சீனப் பகுதியான, எப்பூரில் நடத்திய அகழாய்வில், பட்டணத்தில் கிடைத்தது போன்ற பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளன. எகிப்தின் கூம்பறை (பிரமிடு) உள்ள இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 7 பாரம் (டன் )எடையுள்ள, தமிழகத்தின் குறுமிளகு, மண் பாத்திரம் ஒன்றில் கிடைத்தது. அதேபோல, தேக்கு, தேங்காய் சிரட்டை, பருத்தி பொருட்கள் முதலானவையும் கிடைத்தன. பட்டணத்தில், மிகவும் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, கழிப்பறைகள் கட்டப்பட்டு, மூன்று குடுவைகள் போன்ற பகுதிகளுக்குப்பின், பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர். ‘அமலன்’ எனப், பிராமி எழுத்தில், குறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அது, சமணர் அல்லது புத்த மதத்தைச் சார்ந்தவரின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மற்றபடி, சமய, மத அடையாளம் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. இதனால், தமிழர்கள், புத்த மதப்பரவலுக்கு முன், வளமான பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளது தெரிகிறது.
உங்களின் ஆய்வு முடிவுகளால், நீங்கள் சொல்ல விரும்புவது?
பண்டைய தமிழகம் என்பது, தற்போதைய தமிழகம் மட்டுமல்ல. ஆந்திரா, கருநாடகாவின் தென்பகுதி, புதுச்சேரி, கேரளா மற்றும் தற்போதைய தமிழகத்தை உள்ளடக்கி இருந்துள்ளது. தற்போது, தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில், தங்களின் முன்னோர்கள் பற்றிய புரிதலும், வரலாற்று அணுகுமுறையும் இல்லை. அனைவரும் அண்ணன், தம்பிகள் என்பதைத்தான், இந்த மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கிடைக்கும், தொல்லியல் சான்றுகளின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. தென் மாநிலங்களின் வாழ்வியல் சொல்லும் வளமான சான்றுகளாகச் சங்கக் கால இலக்கியங்கள் உள்ளன.
தென் மாநில முதல்வர்கள் இணைந்து, தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த முடிவுகளைத், திறந்த மனத்துடன் பதிவு செய்ய வேண்டும். அது, தென் மாநிலங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கும். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும், சங்கக்காலச் சான்றுகளுடன் ஒப்பீட்டாய்வுக்கும் முயல வேண்டும்.
ஒப்பீட்டு அகழாய்வு செய்ய, நீங்கள் பரிந்துரைக்கும் இடங்கள்?
 தென் சீனாவின் குவான்சான், எப்பூ, தெற்கு மலாய் தீபகருப்பத்தின் காவோ சாம் காகோ, ஓமனின் கோர் ரோரி, இலங்கையின் மந்தை, அனுராதாபுரம், இந்தியாவின் தம்பரலிப்டி, அரிக்கமேடு, காவேரிப்பட்டிணம், பரிகாசா முதலான 60க்கும் மேற்பட்ட இடங்களின் அகழாய்வு முடிவுகளை, ஒப்பீட்டாய்வு செய்ய வேண்டும். அதைக் கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலப் பாடப்புத்தகங்களிலும் சேர்க்க வேண்டும். அதுதான், நதிநீர் முதலான சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
 நமது  செய்தியாளர், தினமலர், 04.11.2018

இதையும் காண்க: https://www.sahapedia.org/interview-pj-cherian

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அரசு வேலை பெற மலையாளம் கட்டாயம்

அரசு வேலை பெற மலையாளம் அவசியம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு வேலையில் சேர தகுதி படைத்தவர்களாவர். அதே நேரத்தில், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படித்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சனி, 14 செப்டம்பர், 2013

கேரளாவில் உள்ள சென்னை ? ஓணம் பண்டிகை - பிற்பகல் வரையே இருப்பூர்திப் பணிகள்

தென்னக இருப்பூர்தி என்பது கேரள இருப்பூர்திதானே! எனவே, தமிழர் திருநாளுக்குத் தரப்படாத விடுமுறை வாய்ப்பை மலையாள விழாவிற்குத் தரவேண்டியதுதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


ஓணம் பண்டிகை:  பயணச்சீட்டு மாடங்கள் பிற்பகல் வரை மட்டும் இயங்கும்

First Published : 14 September 2013 05:03 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
"ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும், திங்கள்கிழமை (செப். 16) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்' என, தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

திருமணப் போர்வையில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி!



இக்கொடுமை புதிய நிகழ்வுமல்ல; என்றோ நடக்கும் அரிதான நிகழ்வும் அல்ல! தொண்டு நிறுவனங்களின் விளம்பரப்படுத்தப்படும்  ஒரு முகம் அருள்முகமாகும்; மறைக்கப்படும் மறு முகம் கொடூரமானதாகும். ஆதரவற்ற குழந்தைகள் இருப்பின், அழகான குழந்தைகளே தத்து எடுக்கப்படும் எனப் பாகுபாடுகாட்டி வளர்த்தல்; தத்து என்ற பெயரில் அழகான குழந்தைகளை விற்றல்  சிறுவர் சிறுமியரின் முகம் காணாமல் அயலகத்தில் உள்ள தத்துப் பெற்றோரர்களிடம் குழந்தைகளுக்கான அன்பளிப்பு என்ற பெயரில் பொருள்களைப் பறித்தல் என மறுமுகம் வெறுக்கத்தக்கதாகும். தொண்டு நிறுவனங்களின் கைகளுக்கும் கால்களுக்கும் பூட்டுகள்போட்டால்தான் இவை நிற்கும்.  இந்த  நேர்வில் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் தண்டனை தருவதுடன் அரபியருக்கும் கடுந்தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் திருமணப் போர்வையில் பரத்தையராகத் திரிவோர் தங்களை மாற்றிக் கொள்வர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி


திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
17 நாள் குடித்தனம்:

கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முசுலிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு சம்பவம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படித்தவர்கள் நிறைந்த கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில், குறிப்பாக, மலபார் பகுதியில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, அம்மாநில சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
படித்தவர் நிறைந்த மாநிலம் :

மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி இது குறித்து கூறுகையில், ""படித்தவர்கள் நிறைந்த கேரளாவில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர், பிந்து கிருஷ்ணா கூறும் போது, ""தொண்டு நிறுவனங்களும், அனாதை இல்லங்களும் கருணையோடு நடந்து கொள்ளும் என, பொதுவான கருத்து நிலவும் நேரத்தில், பணத்திற்காக, அப்பாவி சிறுமி, வெளிநாட்டைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்யப்பட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ளதை ஜீரணிக்கவே முடியாது,'' என்றார்.இதுபோல், பல சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கோழிக்கோடு அனாதை இல்ல சிறுமி திருமண விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

செவ்வாய், 11 ஜூன், 2013

கருவுயிர்த்த மனைவியைச் சுமந்தபடி 40 அ.க.(கி.மீ.) தூரம் நடந்த இளைஞர்:

கருவுயிர்த்த மனைவியை த் தோளில் சுமந்தபடி 40 கி.மீ., தூரம் நடந்த பழங்குடி இளைஞர்: மனத்தை நெகிழ வைத்த பாசப் போராட்டம்
கோட்டயம்:கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை.
வறுமையின் பிடியில்...:

கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப் பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர்.இந்த பகுதியைச் சேர்ந்த, அய்யப்பன் என்ற இளைஞருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, சுதா என்ற பெண்ணுடன், கடந்தாண்டு திருமணம் நடந்தது. சுதா, ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், கடந்த வாரம், சுதாவுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.அப்போது, அங்கு, மிக பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த பகுதிக்கு, கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து, எந்த வாகன போக்குவரத்தும் இல்லை. கால்நடையாகவே, நகரங்களுக்கு செல்ல வேண்டும்.வேறு வழியில்லாததால், மனைவியையும், அவரது வயிற்றில் உள்ள சிசுவையும் காப்பாற்றுவதற்காக, அய்யப்பன், தைரியமாக ஒரு முடிவை எடுத்தார். மனைவியை தோளில் சுமந்தபடியே, பலத்த மழையையும் பொருட்படுத்தாது, அடர்ந்த வனப் பகுதியில், வேகமாக நடந்தார்.அதிகாலை, 6:00 மணிக்கு, அவரது, நடை பயணம் துவங்கியது. நேரம் செல்லச் செல்ல, மழை அதிகரித்தது. நீண்ட நேரம் சுமந்ததால், தோளில், கடுமையான வலியும் ஏற்பட்டது. ஆனால், மனைவியின் அபய குரலும், சிசுவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பும், அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தின.

வலிப்பு நோய்:

இதனால், சிரமத்தை பொருட்படுத்தாமல், தொடர்ந்து நடந்தார். இறுதியாக, 40 கி.மீ., தூரத்தை கடந்த அவர், மாலை, 6:00 மணிக்கு, மலை அடிவாரத்துக்கு வந்தார். அங்கிருந்த ஜீப்பை, வாடகைக்கு அமர்த்தி, தன் மனைவியை, பத்தனம்திட்டா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறினர். இதையடுத்து, உடனடியாக, கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தன் மனைவியை அழைத்து வந்தார். அங்கு, சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினர்.சுதாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் போராட்டத்துக்கு பின், சுதாவை காப்பாற்றினர். ஆனாலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தை, இறந்தே பிறந்தது. இதனால், அய்யப்பன், சோகத்தில் ஆழ்ந்தார்.இந்த தகவல் வெளியானதும், கோட்டயம், பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள், மனைவியை தோளில் சுமந்தபடி, கடும் மழையில், 40 நிமிடங்கள் நடந்த, அய்யப்பனின் மன உறுதியை பாராட்டினார். அவரது குடும்பத்துக்கு, நிதி உதவியும், குவியத் துவங்கியுள்ளது.

சனி, 16 மார்ச், 2013

கேரளாவில் முல்லை - பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு

கேரளாவில் முல்லை - பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு
திருவனந்தபுரம், மார்ச். 16-

கேரள சட்டசபையில் 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி கே.எம். மானி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கேரளாவில் வாழும் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு விவசாய கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

விவசாய கடனுக்கு காப்பீடு வழங்கப்படும். கடன் பெற்ற விவசாயி இறந்து விட்டால் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிகள் 13.5 சதவிகிதத்தில் இருந்து 14.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

கேரளாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களும் நவீனப் படுத்தப்படும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மத்திய கேரளாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன மருத்துவமனை அமைக்கப்படும்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும். நிலத்தை வாங்கி 3 மாதத்திற்குள் மறு விற்பனை செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும்.

பீடி தவிர மற்ற புகையிலை பொருட்களுக்கான வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும். பீர், ஒயின் மற்ற மதுபான வகைகளுக்கு 105 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இதன் மூலம் ரூ.280 கோடி கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜனவரி, 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களை த் தடுக்க கேரளா புது ச் சட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை த் தடுக்க கேரளா புது ச் சட்டம்


திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரத்தால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்தால், அதற்கு காரணமான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், புது சட்டம், கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.கேரளாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில், சட்டத்தை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில், பெண்களை கேலி செய்தல்; வாகனங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ, அருகே அமர்ந்துள்ள பெண்ணை தொடுவது; சில்மிஷம், அவமரியாதை செய்வது போன்றவை, இனிமேல் குற்றச்செயல்களாக கருதப்படும்.இவற்றிற்கு, ஏழு ஆண்டுகள் வரை, கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பெண் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டாலோ, இறக்க நேரிட்டாலோ, குற்றவாளிக்கு, அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும்.மேலும், மொபைல்போனை பயன்படுத்தி, பெண்களை அவமானப்படுத்துதல், தொந்தரவு செய்தல், ஆபாச, எஸ்.எம்.எஸ்., அனுப்புதல், படமெடுத்தல் போன்றவற்றிற்கும், அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இதற்கான மசோதா, கேரள மாநில சட்டசபையின், அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதன், 9 ஜனவரி, 2013

கேரளப் புது அணைத் திட்டத்தில் விழுந்தது "மண்'

தேனி: வன உயிரின சரணாலயத்தை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளைய' பரப்பை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட திட்டமிட்டுள்ள, கேரள அரசின் கனவில் மண் விழுந்துள்ளது.


சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம், பெரியாறு புலிகள் சரணாலயம் என, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி முழுதும், "மிகவும் பாதுகாக்கப்பட்ட' வனப்பகுதியாக மாறியுள்ளது. தேனி, மேகமலை வன உயிரின சரணாலயம், 68 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ளது.
வன உயிரின சரணாலயங்களை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையம்' என, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, சரணாலயத்தை சுற்றி 2 கி.மீ., வரை கட்டடம், தொழிற்சாலை, ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையம் :

வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில், "சுற்றுச்சூழல் வளையத்தை' 8 கி.மீ., அளவுக்கு விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதலாக 2 அல்லது 3 கி.மீ., வரை, "பாதுகாப்பு வளையத்தை' விரிவுபடுத்த, சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்து, ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. இதனால், சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படும். பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் (சுற்றுச்சூழல் வளைய விரிவாக்கத்தால்) வந்து விடும். இதனால், கேரளாவின் புது அணை கனவில் மண் விழுந்துள்ளது. மேலும், தமிழக எல்லையோர வனப்பகுதியில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டுவதும் தடை செய்யப்படும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சனி, 17 நவம்பர், 2012

ஆந்திர, கேரள மீனவர்களால் தமிழக மீனவர்களுக்குச் சிக்கல் - முதல்வர்


சென்னை:"ஆந்திர மீனவர்கள், அவ்வப்போது, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இப்படி, தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை, ஆந்திர மீனவர்கள் கைவிட வேண்டும்' என, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தி உள்ளதை, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வாசித்தார்.’

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூருவில், நேற்று நடந்தது.இதில், தமிழக முதல்வர் சார்பில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் சார்பில், அமைச்சர் மணி மற்றும், நான்கு மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் மேம்பாடு, தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னை, சுற்றுலா வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு பல விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில், தமிழக முதல்வரின் உரையை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்தார். முதல்வர் கூறியிருப்பதை, பன்னீர் செல்வம் வாசித்ததாவது:

தமிழக மீனவர்கள், ஆந்திர ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தால், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பின், தமிழக மீனவர்களிடம், கணிசமான தொகையை பெற்று விடுவிக்கின்றனர்.கடந்த, 2007ல், அமைச்சர் அளவில் நடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கு வசதியாக, மீன்பிடி உரிமம் வழங்க வேண்டும் என, விவாதிக்கப் பட்டது.ஆனால், இந்த விஷயத்தில், ஆந்திர அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. ஆந்திர மீனவர்கள், சட்டத்தை, தாங்களே கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.

இதேபோல், கன்னியாகுமரி மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்தால், கேரள மீனவர்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது; படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அளவிற்கு, மீன்பிடி உரிமம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், மின் தேவை மற்றும் மின் உற்பத்திக்கு இடையே, பெரிய இடைவெளி உள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2012-17), தமிழகத்தின் மின் தேவை, 18 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். ஆனால், தற்போது, 8,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மின்தேவையை பெருக்க, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வரும், 2015க்குள், சூரிய ஒளி மின் உற்பத்தி வழியாக, 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உரையை பன்னீர்செல்வம் வாசித்தார்.

சனி, 20 அக்டோபர், 2012

பெரியாறு அணையில் பீதி கிளப்பும் கேரளா சோதனை என்ற பெயரில் மீண்டும் நாடகம்

பெரியாறு அணையில் பீதி கிளப்பும் கேரளா சோதனை என்ற பெயரில் மீண்டும் நாடகம்
 
கூடலூர்:பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதைத் தொடர்ந்து, வண்டிப்பெரியாரில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக, அபாய ஒலி (சைரன்) எழுப்பி, கேரள அதிகாரிகள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்."பெரியாறு அணை உடைந்து விடும்' என, புரளி கிளப்பி, மக்களிடம் பயத்தை ஏற்படுத்த, கேரள அதிகாரிகள் பல்வேறு நாடகங்களை கையாண்டு வருகின்றனர். அணை உடைந்து, அங்குள்ள மக்கள் நீரில் மிதப்பது போல், "கிராபிக்ஸ்' செய்து, சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பினர்.கன மழை நேரங்களில், அணை உடையும் அபாய நிலையில் இருப்பதாகக் கூறி, அருகில் வசிக்கும் மக்களை, உயரமான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, தங்க வைத்து, பீதியை ஏற்படுத்தினர். இது தவிர, கேரள அரசியல்வாதிகள் அடிக்கடி அணையைப் பார்வையிட்டு, அணை அபாய நிலையில் இருப்பதாக, பேட்டி கொடுத்தனர்.இதன் அடுத்த கட்டமாக, அணை உடைந்து விட்டால், உடனடியாக தெரிவிக்கும் வகையில், வண்டிப்பெரியார் மற்றும் உப்புத்துறையில், "சைரன்' பொருத்தினர். "சைரன்' ஒலிக்கும் போது, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும் என, அச்சத்தை ஏற்படுத்தினர்.தற்போது, நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், "சைரன்' ஒலி எழுப்பி, கேரள அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இது, அப்பகுதியினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த ஐவர் குழுவினர், அணையில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து விட்டனர். இதுகுறித்த தீர்ப்பு, விரைவில் வர உள்ளது.வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் கேரள அதிகாரிகளின் சதிச் செயலை முறியடிக்க, தமிழக அரசு, மேலும் ஒரு வழக்கை தொடர வேண்டியது அவசியம்.

செவ்வாய், 14 ஜூலை, 2009

தலையங்கம்: நேர்மை உறங்கும் நேரம்!



இடதுசாரி இயக்கங்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள்கூட, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களிடம் காணப்படும் எளிமையையும் நேர்மையையும் பாராட்டவே செய்வார்கள். ஏனைய கட்சிகள் எதிலும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களில் கட்டுப்பாடும், கொள்கைப் பிடிப்பும் உண்டு என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த நிலைமை முற்றிலுமாக மாறி, இடதுசாரிக் கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், உள்கட்சிப் பூசல்கள் என்று எல்லா விஷயங்களிலும் ஏனைய கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை சமீபகாலமாகத் தெளிவாக்கி வருகிறார்கள்.

. . . . . . .


. . . .

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, அச்சுதானந்தனின் தனிப்பட்ட நேர்மையும், ஊழலற்ற நிர்வாகமும் காரணம் என்று யாரும் கருதவில்லை. ஆனால், கட்சிச் செயலர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட லாவ்லின் ஊழல்தான்.
இடதுசாரி இயக்கங்களின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி படுதோல்விக்கு வழிகோலியது என்பது உலகறிந்த உண்மை.
எளிமைக்கும், நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும், சித்தாந்தப் பிடிப்புக்கும் பெயர்போன முன்னாள் திரிபுரா முதல்வர் நிரூபன் சக்ரவர்த்தி, கேரளத் தலைவர்கள் எம்.வி. ராகவன் மற்றும் கே.ஆர். கௌரி வரிசையில் இப்போது முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் பொலிட்பீரோவிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இதன் தொடர்விளைவாகக் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைவது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும் ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழக்கவும் செய்கிறது.
நேர்மை உறங்கும் நேரம்... வேறு என்னவென்று சொல்ல?

கருத்துக்கள்

மாநில முதல்வரையே உயர்நிலைக குழுவில் இருந்து நீக்கும் அளவிற்கு மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி நடுநிலையுடன் உள்ளது எனப் பலரும் கூற, இதற்குக் காரணம் ஊழலுக்குத் துணை புரிநத தனியருக்குச் சார்பாகச் செயல்படுவதே என்னும் மற்றொரு கோணத்தையும் தினமணி வாசகர்களுக்குத் தெரிவித்துள்ளது. குறைபாட்டுப் பண்புகளில் இந்திய அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பது மட்டும் நன்கு புரிகின்றது. இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2009 4:59:00 AM

I think the Dinamani editor has to admit himself or by his family immediately at Kilpauk mental hospital. The people of TN will remember how Achu's face went, when he met MK in Delhi to discuss about Periyar Dam. Very rude. This guy is a barbarian. Dinamani wants to support corrupt JJ because she is a brahmin, that is why your are now supporting Achu. Stop it.

By ravi
7/14/2009 2:38:00 AM