முத்திரை-சா.வி.கூட்டுறவுவங்கி - muthirai_SVC co-opbank

  மும்பையிலுள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) எழுத்தர், அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

  மும்பையில் உள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 104 எழுத்தர் (Clerk), அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வாடிக்கையாளர் சேவை அலுவலர் (இளநிலை மேலாண்மைத் தரம்) [Customer Service Officer (Junior Management Grade)] – 24
அகவை (வயது) வரம்பு: 31.03.2016 நாள்படி அகவை 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வாடிக்கையாளர் சேவைப் பகராளர் (எழுத்தர் தரம்) [Customer Service Representative (Clerical Grade)] – 80
அகவை வரம்பு: 31.03.2016 நாள்படி அகவை 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 45 விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏதாவதொரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படைக் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: உரூ.600/– இதனை இணையவழியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: svcbank.com என்கிற இணையத்தளத்தின் மூலம் இணையவழியில் (online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.03.2016

தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan