படைகளைத் திரும்பப் பெறுவது நல்லிணக்கத்துக்கு இன்றியமையாதது – ஒப்புக் கொண்டார் இலங்கை வெளியுறவு அமைச்சர்
படைகளைத் திரும்பப் பெறுவது என்பது
நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி என்று இலங்கை வெளியுறவுத்துறை
அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட
இனப்படுகொலைக்குப் பின்னும் தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள்
குவிக்கப்பட்டிருந்தது பன்னாட்டு அளவில் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாகி
வந்தது.
இந்நிலையில், வாசிங்டனில் உள்ள
அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி
ஒன்றுக்கு விடையளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர
“படைகளைத் திரும்பப் பெறுவது என்பது நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி”
என்று குறிப்பிட்டார்.
எரிடேசு அமைப்பின் ஆய்வாளரான இலிசா கர்ட்டிசு இந்த உரையாடலை நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்பொழுது, ஊடகவியலாளர் இலசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இலிசா கர்ட்டிசு மங்கள சமரவீர, அது பற்றிய உசாவல்கள் (விசாரணைகள்) நடப்பதாகக் குறிப்பிட்டார்.
தரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக