நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்
ஆந்திரப்பிரதேசம் இராசமுந்திரியில்
செயல்பட்டு வரும் நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள
தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தக் காலியிடங்கள்: 34
பணி: தொழில்நுட்பர் (Technician: T-1) – 16
தகுதி:
பள்ளி இறுதி வகுப்புத் (+2)
தேர்ச்சி.
பணி:
தொழில்நுட்ப உதவியாளர் (களவயல் / ஆய்வகம்) (Technical Assistant: T-3)
(Field Farm/Lab) - 18
தகுதி:
வேளாண்மை அல்லது வேளாண்மை தொடர்பான அறிவியல், குமுக அறிவியல் (Social Science) பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
அகவை வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: உரூ.200/- இதனை ICAR Unit – CTRI, Rajahmundry என்கிற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ctri.org.in
என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கிப்
பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் உரிய முத்திரைகள்
(attestations) பெற்று வங்கி வரைவோலையை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 19.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.
தரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக