தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும்
இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற
ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை
யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர்.
அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு
மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்;
தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற
நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.
“முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்”
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்”
என்று ஆரியரை நோக்கி முழங்கும்
‘கபிலரகவ’லையுங் காண்க. இன்னும அவர்தம் புந்திநலங் காட்டித்
தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து
கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் மொழி பெயர்த்துத் தமிழர்
அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை
வந்தன போலவும் காட்டினர்.
பரிதிமாற்கலைஞர் : தமிழ் மொழியின் வரலாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக