கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும்
கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders &
Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்தக் காலியிடங்கள்: 20
பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)]
தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல்
(Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics)
பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள்
பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: உரூ.550/- https://jobapply.in/grse2016
என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலுத்துச் சீட்டைப்
பதிவிறக்கம் செய்து பாரத அரசு வங்கி கிளைகளில் இக்கட்டணத்தைச் செலுத்தலாம்.
இணைய வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2016
விண்ணப்ப அச்சுப் படி (print copy) சென்று சேரக் கடைசி நாள்: 18.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.grse.nic.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.
தரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக