தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம்
சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில்
ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான
தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர்
ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ்
உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண்
பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.
இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய
ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும்
நயவஞ்சகமாக இழுக்கும் திட்டத்தினால் 100 மாணவர்கள் இருந்த இப்பள்ளியில் 15
மாணவர்களே மிஞ்சி உள்ளனர். ஆசிரியர்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.
இந்நிலையில் இப்பள்ளியை இத்திங்களில் மூடிவிட்டு இருக்கிற 15
மாணவர்களையும் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பிவிடவேண்டிய நெருக்கடி
ஏற்பட்டுள்ளது.
தென்மொழி இறைக்குருவன், தமிழ்ச்சான்றோர்
பேரவை அருணாசலம் ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்ட திருவள்ளுவர் பெயரால்
இயங்கும் தமிழ்வழிப்பள்ளி மூடப்படாமல் காக்கப்பட வேண்டும் என்ற ஆவலால் நான்
இப்பள்ளியை தொடர்ந்து நடத்த தமிழர்கள் யாராவது முன்வருவீர்களா எனக் கேட்டு
இவ்வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இட வாடகையை மட்டும் கொடுத்துவிட்டு
இப்பள்ளி நிருவாகத்தை ஏற்று நடத்த
தமிழுள்ளம் கொண்ட யாராவது முன்வருவீர்களா?
அல்லது திங்கள்தோறும் உரூபாய் 1000/500/100
என்ற அளவில் பணம் அனுப்ப முன்வருவீர்களா?
ஆறுமுகம் அலைபேசி எண் 9443815216
எனது அலைபேசி எண் 9789433344
– தமிழ் இராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக