பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் !
நிகழ்ச்சி நிரல் : காலை 10 மணி முதல் 1 மணி வரை௧. தமிழ்த் தாய் வாழ்த்து
௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம்
வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை
தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி
தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டுகு் கழகம், தமிழ்த்திரு. பாரிசாலன், தமிழர் உலகம்
௩. தமிழர் ஓகம் குறித்த வரலாறு, தமிழர் வாழ்வியல் முறை.
ஓகம் செய்முறை விளக்கம் – ஓக ஆசான் அசித்தர் .
௪. தமிழர் மெய்யியல், உயிரெழுத்து ஓகம், ஒளிநிலை ஊழ்கம் (தியானம்), மூச்சுப் பயிற்சி – இராசுகுமார் பழனிசாமி .
இந்த நல்வாய்ப்பை தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி இந்த இலவசப் பயிலரங்கிற்கு குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஓகம் குருகுலம், தமிழர் பண்பாட்டு நடுவம்.
இடம் : தமிழர் உலகம் 14, குகன் தெரு, காமகோடி நகர்,
வளரசரவக்கம் சென்னை 600087
வளசரவாக்கம் ஊராட்சி அலுவலகப் பேருந்து நிறுத்தம்
கரூர் வைசிய வங்கிக்கு அண்மைத்தெரு
ஓக (யோக)க் கலை
ஓக இருக்கை (யோகாசனம்)
‘ஓகம்’ என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும். “ஓகம் என்றால் அலையும் மனத்தை
அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல்” என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.
‘ஆசனம்’ என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில்
குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த
நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை
என்றழைக்கலாம்.
‘யோக்’ என்பது சமற்கிருதச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா
என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா
என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு
இருக்கிறது. நம்முடைய கலைகளைச் சமற்கிருதம் தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு
மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும்
தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால்
முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு.
ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும்
நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு
வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த
“ஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா,
யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற
இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று
நிறுவுகிறார் அசித்தர்
http://thamizhchitthar.blogspot.in/ ஓக வழிபாடு
உகு > ஒகு > ஒக்கு
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.
உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள்
போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும்
ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.
ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு
> யோகு எனவும் சொல்லப்படும். சமற்கிருத நூல்களில் இந்த செந்தமிழ்ச்
சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.
ஓகப்பயிற்சியை இருந்துசெய்யும் இருப்புநிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை,
ஆதனம் (அ) ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை
ஓகாசனம் ( யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது.
ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க
யோகம் எனப்படும்.
https://www.facebook.com/398453515197/photos/a.10150225787670198.464300.398453515197/10155162193080198/?type=1&theaterதமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்!
தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற
ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்!!
ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
தமிழ்ப் பெயர்கள் | சமற்கிருதப் பெயர்கள் | ஆங்கிலப் பெயர்கள் |
1. ஞாயிறு வணக்கம் | சூரிய நமசுகாரம் | SALUTE TO THE SUN |
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம் | ஏகபாத சூரிய நமசுகாரம் | SALUTE THE SUN ON ONE LEG |
3. அரை நிலாவிருக்கை | அர்த்த சந்திராசனம் | CRESCENT POSTURE |
4. மலையிருக்கை | மேரு ஆசனம் | MOUNTAIN POSTURE |
5. மலை நிமிர்வு இருக்கை | தாடாசனம் | MOUNTAIN ERECT POSTURE |
6. தாமரை இருக்கை | பத்மாசனம் | LOTUS POSTURE |
7. எழும்பு தாமரை இருக்கை | உத்தித பத்மாசனம் | RAISED LOTUS POSTURE |
8. பூட்டிய தாமரை இருக்கை | பத்த பத்மாசனம் | LOCKED LOTUS POSTURE |
9. நாணல் முதுகு இருக்கை | பச்சிமோத்தாசனம் | BACK ERECTING POSTURE |
10. மரவிருக்கை | டோலாசனம் | TREE POSTURE |
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / | பாத அசுதாசனம் | HAND AND FOOT POSTURE |
12. தவளை இருக்கை | பெக்காசனம் | FROG POSTURE |
13. மீன் இருக்கை | மச்சாசனம் | FISH POSTURE |
14. சுறவம் இருக்கை | மகராசனம் | SHARK POSTURE |
15. முதலை இருக்கை | மக்கராசனம் | CROCADILE POSTURE |
16. சங்கு இருக்கை /உடல் முறுக்கும் இருக்கை | வக்ராசனம் | SEA SHELL POSTURE |
17. ஆமை இருக்கை | கூர்மாசனம் | TORTOISE POSTURE |
18. கை நீட்டிய ஆமை இருக்கை | விக்சேபம் கூர்மாசனம் | HAND STRETCHED TORTOISE POSTURE |
19. தேள் இருக்கை | விருச்சிக ஆசனம் | SCORPION POSTURE |
20. பாம்பு இருக்கை | புசங்காசனம் | SERPENT POSTURE |
21. ஆமுகவாய் இருக்கை | கோமுகாசனம் | COW FACE POSTURE |
22. ஆவினிருக்கை | கோவாசனம் | COW POSTURE |
23. பூனை இருக்கை | பில்லியாசனம் | CAT POSTURE |
24. ஒட்டகவிருக்கை | உசர்ட்டாசனம் | CAMEL POSTURE |
25. நாய்முக இருக்கை | அதோமுக சுனங்கனாசனம் | DOG FACE POSTURE |
26. புலி இருக்கை | வியாகராசனம் | TIGER POSTURE |
27. அரிமா இருக்கை | சிம்மாசனம் | LION POSTURE |
28. மிடுக்கான குதிரை இருக்கை | கம்பீர அசுவினி தீரனாசனம் | BRA |
29. முயல் இருக்கை | சசாங்காசனம் | RABBIT POSTURE |
30. நரி இருக்கை | மார்சரி ஆசனம் | FOX POSTURE |
31.வெட்டுக்கிளி இருக்கை | சலபாசனம் | GRASSHOPPER (LOCUST) POSTURE |
32. அரை வெட்டுக்கிளி இருக்கை | அர்த்தசலபாசனம் | SEMI GRASSHOPPER POSTURE |
33. மயிலிருக்கை | மயூராசனம் | PEACOCK POSTURE |
34. புறாவிருக்கை | கப்போட்டாசனம் | DOVE POSTURE |
35. பறக்கும் புறாவிருக்கை | உடுத்தாஉவா கப்போர்ட்டா | FLYNG DOVE POSTURE |
36. கொக்குவிருக்கை | பக்காசனம் | CRANE POSTURE |
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை | ஏகபாத பக்காசனம் | SINGLE FOOTED CRANE POSTURE |
38. கலுழன் இருக்கை | கருடாசனம் | EAGLE POSTURE |
39. சேவல் இருக்கை | குக்குடாசனம் | COCK POSTURE |
40. நிற்கும் மயிலிருக்கை | கடுடா மயூராசனம் | STANDING PEACOCK POSTURE |
41. வாத்து இருக்கை | அம்சாசனம் | DUCK POSTURE |
42. நடன இருக்கை | நடனாசனம் | POSTURE OF NATARASA |
43. களிக்கூத்து | ஆனந்த தாண்டவம் | PLEASURE DANCE POSTURE |
44. கூத்தரசன் இருக்கை | நடராச ஆசனம் | KING OF DANCE POSTURE |
45. வீர அடைவு இருக்கை | வீர அனுமான் ஆசனம் | BRAVE STEP POSTURE |
46. ஓக முத்திரை | யோகமுத்ரா | OGAM GESTURE |
47. பெரு முத்திரை | மகாமுத்ரா | GREAT GESTURE |
48. படையல் முத்திரை | அஞ்சலி முத்ரா | HOMAGE GESTURE |
49. குதிரை மலவாய் முத்திரை | அசுவினி முத்ரா | HORSE’S ANAL GESTURE |
50. ஆறுமுக முத்திரை | சண்முக முத்ரா | HEXAGON GESTURE |
51. நாற்காலி இருக்கை | உட்கட்டாசனம் | CHAIR POSTURE |
52. அரசரிருக்கை | பூரண உட்கட்டாசனம் | THRONE POSTURE |
53. சக்கரவிருக்கை | சக்ராசனம் | WHEEL POSTURE |
54. அரைசக்கரவிருக்கை | அர்த்தகடி சக்கராசனம் | SEMI WHEEL POSTURE |
55. வில்லிருக்கை | தனுராசனம் | BOW POSTURE |
56. காதருகுவில்லிருக்கை | ஆகர்ண தனுராசனம் | EXTENDED BOW POSTURE |
57. படகிருக்கை / நாவாய் இருக்கை | நவாசனம் | BOAT POSTURE |
58. முக்கோணவிருக்கை | திரிகோனாசனம் | TRIANGLE POSTURE |
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை | பரிவர்த்த திரிகோனாசனம் | TRANSFER TRIANGLE POSTURE |
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை | அலாசனம் | PLOUGH POSTURE |
61. வழிபாட்டிருக்கை | சசாங்காசனம் | WORSHIP POSTURE |
62. வீரவிருக்கை | வீராசனம் | BRAVE POSTURE |
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை | வீரபத்ராசனம் | GLABELLA VIEW POSTURE |
64. அம்மி அரைக்கும் இருக்கை | உபவிசுட்டகோணாசனம் | GRINDING POSTURE |
65. காலணி தையலிருக்கை | பத்ராசனம் | SHOEMAKER POSTURE |
66. தேரோட்டி இருக்கை | சாரதாசனம் | CHARIOT RIDER POSTURE |
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / | சானுசீராசனம் | HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE. |
68. இணை காலடி இருக்கை | சமபாதாசனம் | PARRALLEL FOOT POSTURE |
69. ஒரு காலூன்றி இருக்கை | நின்ற பாதாசனம் | SINGLE LEG POSTURE |
70. கோண இருக்கை | கோணாசனம் | ANGLED POSTURE |
71. விலாப்பக்க கோண இருக்கை | பார்சுவ கோணாசனம் | RIBSIDE ANGLED POSTURE |
72. மண்டிவல்லிருக்கை | வச்சிராசனம் | FIRM KNEELING POSTURE |
73. மழலை இருக்கை | பாலாசனம் | CHILD POSTURE |
74. கிடைநிலை வல்லிருக்கை | சுப்த வச்சிராசனம் | SUPINE ANKLE POSTURE |
75. குந்தி கைகூப்பு இருக்கை | உட்கட்டாசனம் | PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD |
76. கை கூப்புகை தாமரை இருக்கை | பர்வட்டாசனம் | OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE |
77. மாற்று அமர் இருக்கை | அர்த்தமத்ச்யேந்தராசனம் | CONTRA SITTING POSTURE |
78. பூட்டிய கோணவிருக்கை | பத்தகோணாசனம் | LOCKED ANGLE POSTURE |
79. நீள்காலடி இருக்கை | உத்தான பாதாசனம் | RAISED FOOT ERECT |
80. ஓகத்துயில் | யோக நித்ரா | OGAM SLEEP |
81. அரை உடல் இருக்கை | விபரீதகரணி | HIP STAND POSTURE |
82. முழு உடல் இருக்கை | சர்வாங்காசனம் | SHOULDER STAND |
83. பாதி முழு உடல் இருக்கை | பர்வதாசனம் | SEMI SHOULDER STAND |
84. மேடை இருக்கை | பீடாசனம் | STAGE POSTURE |
85. பகுதலை இருக்கை | அர்த்த சிரசாசனம் | SEMI INVERTTED |
86. தலை இருக்கை | சிரசாசனம் | INVERTTED POSTURE |
87. வளிகழித்தலிருக்கை | பவன முக்தாசனம் | WIND RELEASING TECHNIQUE |
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை | உட்டியானபந்தம் | FLYUP LOCK |
89. குடல் சுழற்றியிருக்கை | நௌலி | BOWEL CIRCULATING POSTURE |
90. மூச்சொழுக்கம் | பிராணாயாமம் | ORDER OF BREATH |
91. தலை தூய்மை | கபாலபாதி | CLEANSING OF BRAIN |
92. துருத்தி மூச்சு | பசுதிரிகா | BELLOW BREATH |
93. சீழ்க்கை | சீத்காரி | WHISTLING |
94. நீர்த் தூய்மை | சலநேதி | WATER CLEANSING |
95. குளிர் சீழ்க்கை | சீத்தளி | COOL WHISTLE |
96. மூலக்கட்டு | மூலபந்தம் | ANAL CONTRACTION |
97. நாடித் தூய்மை | நாடி சுத்தி | CLEANSING OF PULSE |
98. தேனீ ஒலி | பிராமரி | HONEY BEE HISSING |
99. கண் தூய்மை | திராடகா | EYE CLEANSING |
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் | சதந்தா | INHALING THROUGH CLEANCHED TEETH |
101. உள் மூச்சு | அனுலோமம் | INHALING |
102. வெளி மூச்சு | விலோமம் | EXHALING |
103. தொண்டை ஒலி | உச்சயி | HISSING OF PHARYNX |
104. இயல்பிருக்கை | சுகாசனம் | AT EASE POSTURE |
105.. அமைதி இருக்கை | சவாசனம், | LYING RELAX POSTURE |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக