அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில் தோன்ற வேண்டுமானாலும், அனைத்துக் கலைச்சொற்களும் அடங்கிய ஒரு பட்டியலை உருவாக்கி அனைவரும் அந்தப் பட்டியலையே பயன்படுத்துவதான ஒரு மரபைத் தமிழ் எழுத்தாளர்கள் ஏற்க வேண்டும்.
 அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆங்கிலத்தில் வழங்கும் கலைச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையாக ஒரு துல்லியமான, திட்டவட்டமான, ஒருத்துவத் தமிழ்க் கலைச்சொல்லைத் தரும் முழுமையான, ஒன்றுக்கொன்றான, தன்னியைபான பட்டியலை முன்வைப்பதன் முதற்படி இந்நூல்.
 பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களிலிருந்து கலைச் சொற்களைத் திரட்டி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமாக இரண்டு பட்டியல்களாகத் தருகிறேன். இந்தப் பட்டியல்கள் ஏறத்தாழ பதினான்காயிரம் பதிவுகள் அடங்கியவை. இந்த நூல் ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்டதாகையால் அதை உங்கள் கணினிக்குப் பதிவிறக்கியபின் பார்வையிடுவது நலம். தமிழ் ஆர்வலர் அனைவரும் இதை வரவேற்று ஆதரிப்பதுடன் மற்றவர்களுக்கும் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
அந்நூலின் இணைப்பு வருமாறு : –
kalaichol_gudie_jayapandiayan01

– செயபாண்டியன் கோட்டாளம்seyapandian_Kottalam01