வெள்ளி, 20 மார்ச், 2015

செயற்கை இலைகளால் வாழையிலை விலை வீழ்ச்சி


 70plasticleaf70-bananleaf
  தேவதானப்பட்டி பகுதியில் செயற்கை இலைகளால் வாழையிலைகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.
  தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, பரசுராமபுரம், கெங்குவார்பட்டி போன்ற பல பகுதிகளில் வாழை பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் பலவகையான வாழைக்காய்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.
  தற்பொழுது செயற்கையாக ஞெகிழியில் பல்வகை வடிவமைப்புகளில் வாழை இலைகள் வந்துவிட்டன. இதனால் இயற்கையாக உள்ள வாழை இலைகள் வணிகம் மந்தமாகிவிட்டது. மேலும் செயற்கை வாழை இலைகள் கவர்ச்சியுடனும், தூய்மையாகவும் காணப்படுவதால் பெரும்பாலான திருமண விழாக்களில் இதனையே பயன்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் செயற்கை இலை உடலுக்குக் கேடுதரும் என்பதையும் இயற்கையான வாழை இலை மருந்துபோல் செயல்பட்டு நலம் தரும் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
  இதன் தொடர்பாக மருகால்பட்டியைச்சேர்ந்த, வாழை பயிரிடும் சையது அபுதாகிர் கூறுகையில், “தற்பொழுது வாழை இலைக்கட்டு உரூ.150க்குத்தான் விற்பனை ஆகிறது. வாழையைப் பயிரிட்டவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் உழைத்தாலும் கூலிஆட்கள் மூலம்தான் வாழை இலைகளை வெட்டுகின்றனர். அவ்வாறு வெட்டும்போது அவர்களுக்குக் கூலியாக இருநூறு உரூபாய் கொடுக்கிறோம். அதன்பின்னர் அக்கட்டுகளை தலையில் சுமந்து வாகனத்தில் ஏற்றிச் சந்தைக்குக் கொண்டு செல்லும்போது அதன் விலை உரூ.250 வரை ஆகிறது. ஆனால் கடைகளில் 100 உரூபாய் முதல் உரூ.150 வரைதான் விற்பனை ஆகிறது. இதனால் உழவர்கள்‌ பெரும் இழப்பு அடைகின்றனர்” என்றார்.
 இயற்கையே சிறந்தது என மக்கள் உணர்வார்களா?
70vaigaianeesu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக